வேல் யாத்திரை இன்று நிறைவு ! மத்திய பிரதேச முதல்வர் பங்கேற்பு

Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chauhan will be the special guest at the closing ceremony of the Vell Yatra

பாஜக சார்பில் வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி இன்று திருச்செந்தூரில் நடைபெறவுள்ளது,இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்கிறார்.

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு யாத்திரைக்கு  அனுமதி மறுத்தது.அனுமதி மறுக்கப்பட்டாலும் திருத்தணியில் தொடங்கிய வேல்யாத்திரை தொடர்ந்து முருகனின் அறுபடை வீடுகளில் வேல் யாத்திரை நடைபெற்றது.

இதனையடுத்து பாஜக சார்பில் தடையை மீறி திட்டமிட்டபடி வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி இன்று திருச்செந்தூரில் நடைபெறவுள்ளது.இந்த நிறைவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்கிறார்.வேல் யாத்திரை நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இன்று நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில்,நேற்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திருச்செந்தூர் வந்து முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.