நேற்று முதல் டிவிட்டரில் பலரும் ஒற்றை வார்த்தை டிவீட்களை போஸ்ட் போட ஆரம்பித்துள்ளனர். இதனை யார் ஆரம்பித்தார்கள் என சரியாக தெரியவில்லை. திடீரென ட்ரெண்ட் ஆகின,
எடப்பாடி பழனிச்சாமி,விஜயகாந்த், டிடிவி தினகரன், சசிகலா , சீமான் என அரசியல் கட்சியினர் உட்பட பல பிரபலங்களும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டனர்.
அரசியல் பிரமுகர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் என்னவெல்லாம் விளையாடினார்கள் என்பதை இப்பொது பார்க்கலாம். எடப்பாடி பழனிச்சாமி – தமிழ்நாடு , விஜயகாந்த் – வறுமை ஒழிப்பு, டிடிவி தினகரன் – அம்மா, சசிகலா – ஒற்றுமை – அதிமுக டிவிட்டர் – எடப்பாடியார் , ஆ.ராசா – பெரியார் , சீமான் – தமிழ்த்தேசியம் என தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.