அதிமுகவை மீண்டும் தமிழக அரசு ஆட்சி கட்டிலில் அமர வைத்தே தீருவேன்’ என அதிமுக பொன்விழா ஆண்டு குறித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வரும் ஒக்டோபர் 17ஆம் தேதியன்று அதிமுக கட்சியை மறைந்த முன்னாள் மூத்தவர் எம்.ஜி.ஆர் தொடங்கி 50 வருடம் ஆக போகிறது. இதனை பொன்விழா ஆண்டாக கொண்டாட அதிமுகவினர் தயாராகி வருகின்றனர். இதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் […]
காவேரி – கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, போதை பொருள் நடமாட்டம் . ஆகியவை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறியள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. இன்று காலை 11 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அதிமுகவை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் இருந்தனர். காலை […]
அண்ணா எழுதிய புத்தகங்கள் மற்றும் சில புத்தகங்களை இபிஎஸ்க்கு அனுப்பிவிட்டு, திராவிடம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அதிமுகவை அடிமைகள் முன்னேற்ற கழகம் என மாற்றிவிடுங்கள் – என திமுக சுற்றுசூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி இபிஎஸ்க்கு டிவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். திமுக கட்சியின் சுற்றுசூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேயா சிவசேனாபதி , அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார். அது குறித்து தனது டிவிட்டர் […]
இபிஎஸ் சந்தித்த 3 தேர்தல்களும் தோல்வி. அவர் தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள் என பேசிய பண்ருட்டி ராமசந்திரன் கருத்துக்கு எதிராக இபிஎஸ் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், ‘ அதிமுகவுக்கு அறிவுரை கூற உங்களுக்கு தகுதியில்லை.’ என தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதிமுக தற்போது ஓர் நெருக்கடியான சூழலில் இருக்கிறது. அதனை மீட்டெடுக்க ஓ.பன்னீர்செல்வம் போராடி வருகிறார். நாம் அவருடன் துணை நிற்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த 3 தேர்தல்களும் தோல்விதான். அவர் தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள் […]
நேற்று முதல் டிவிட்டரில் பலரும் ஒற்றை வார்த்தை டிவீட்களை போஸ்ட் போட ஆரம்பித்துள்ளனர். இதனை யார் ஆரம்பித்தார்கள் என சரியாக தெரியவில்லை. திடீரென ட்ரெண்ட் ஆகின, எடப்பாடி பழனிச்சாமி,விஜயகாந்த், டிடிவி தினகரன், சசிகலா , சீமான் என அரசியல் கட்சியினர் உட்பட பல பிரபலங்களும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டனர். அரசியல் பிரமுகர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் என்னவெல்லாம் விளையாடினார்கள் என்பதை இப்பொது பார்க்கலாம். எடப்பாடி பழனிச்சாமி – தமிழ்நாடு , […]
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்னும் சற்று நேரத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் எனவும்,தவறாமல் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தலைமைக் கழகம் அறிவிப்பு விடுத்துள்ளது.ஆனால்,அதில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் பெயரில்லாமல் தலைமை நிலையச் செயலாளர் என்ற பேரில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து,ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி இன்று நடைபெற உள்ள தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஒருங்கிணைப்பாளர் […]
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 7 பேரை நீக்கம் செய்து இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், மேலும் 8 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், சேலம் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நேற்று ஒருநாள் பாதிப்பு 9,000-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், கொரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதிகாரிகளுடன் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3-ம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியானது. அதற்கான செய்முறை தேர்வுகள் வரும் 16-ம் தேதி […]
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பழனிசாமி, நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அடுத்தகட்ட பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் முதல்வர் பழனிசாமி, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அவர், நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக […]
முதல்வர் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா, வரும் ஜனவரி 27 ஆம் தேதி பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகவுள்ள நிலையில், அவருக்கு உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சசிகலாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட தீவிர தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் […]
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.விடம் கைகட்டி நிற்பதாக “தமிழகம் மீட்போம்” என்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், “தமிழகம் மீட்போம்” என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்திவருகிறார். அந்தவகையில், தஞ்சாவூரில் இன்று நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அப்பொழுது பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி பிரச்சனைக்கு தீர்வு காணாமல் பாஜகவிடம் கைகட்டி நிற்பதாகவும், […]
நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான நிவர் புயல், கடந்த 28 ஆம் தேதி முழுமையாக கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கம் காரணமாக சென்னை, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் சாலைகைள் உட்பட பல இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் ஏரி, குளங்கள் என அனைத்தும் நிரம்பியது. இந்தநிலையில், இந்த புயல் தாக்கம் காரணமாக பல இடங்களில் நெல், உள்ளிட்ட […]
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்திக்கவிருந்த நிலையில், திடீரென அந்த சந்திப்பு ரத்தானது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆளுநர் காத்து வருவதால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து பேசவிருந்தார். […]
சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பேசுகிறார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. இதன் காரணமாக 7 விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு தமிழக அரசு கோப்புகளை சமர்ப்பித்த நிலையில், ஆளுநர் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை […]
சேலம் மாவட்டத்திற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, ரூ.118.93 கோடி மதிப்பீட்டில் 44 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, வனவாசி பகுதியில் ரூ.123.53 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், ரூ.118.93 கோடி மதிப்பீட்டில் 44 திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாடி வைத்தார். இந்த விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதனைதொடர்ந்து நடைபெற்ற […]
பீகார் தேர்தலை தொடர்ந்து, தமிழகத்தில் பாஜக வெற்றிபெறும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பழனிசாமியை சந்தித்ததாகவும், இந்த சந்திப்பில் அரசியல் பற்றி பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் […]
பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து வரும் 12ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவிய கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கடந்த 7 மாதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அண்மையில், வருகின்ற 16-ம் தேதி பள்ளிகள் கல்லூரிகள் திறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளும், அனைத்து இளநிலை படிப்பு துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதற்காக, […]
7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்தோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார். 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்துள்ளதாகவும், இதில் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆளுநர்- முதல்வர் சந்திப்பு குறித்து சென்னை, கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் […]
கோயம்பேடு சந்தையில் பழம், சிறு வியாபாரிகளை அனுமதிப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது பேசிய முதல்வர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதாகவும், பண்டிகை காலத்தில் கொரோனா […]