வன்முறைக்கு இதுதான் காரணம்.. திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும் – ஈபிஎஸ்

தமிழக அரசின் அலட்சியப்போக்கால் கள்ளக்குறிச்சியில் வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி பேட்டி.

தமிழக அரசின் அலட்சியப்போக்கால் கள்ளக்குறிச்சியில் வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி பேட்டி.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பெண்கள் பாதுகாப்பிலும், சட்ட ஒழுங்கு பாதுகாப்பிலும் செயலிழந்துவிட்டது இந்த விடியா அரசு. கள்ளக்குறிச்சி சம்பத்தில் திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் கைதை முன்கூட்டியே செய்திருந்தால், இந்த கலவரத்தை தவிர்த்திருக்கலாம்.

மாணவி உயிரிழந்த பிறகு பதற்றமான சூழ்நிலை நிலவுவது தெரிந்தும், அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் மெத்தனப்போக்கே இப்படிப்பட்ட நிகழ்விற்கு காரணம். பதட்டமான சூழலை உளவுத்துறை மூலம் அறிந்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். பெற்றோர் வைத்த கோரிக்கையை முறையாக விசாரித்திருந்தால் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்த்திருக்கலாம்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீசார் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. பெண்கள் பாதுகாப்பில் செயலிழந்துவிட்டது இந்த அரசு, விசாரணையில் எந்த நடவடிக்கை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ், அதிமுக அலுவலகத்தில் சமூக விரோதிகள் நுழைவதாக கிடைத்த தகவலின் படி புகாரளித்தோம், பாதுகாப்பளிக்காத ஒரே அரசாங்கம் இந்த அரசாங்கம். ரவுடிகளுக்கும், குண்டர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்த அரசு இந்த அரசு என கூறினார்.

வன்முறைக்கு இதுதான் காரணம்.. திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும் – ஈபிஎஸ்