அவர்கள் ஒன்றும் சிங்கம், புலி அல்ல கொசுக்கள் தான் – ம.நீ .ம. கமல்ஹாசன்

Kamal Haasan said AIADMK and DMK should be crushed with their fingers as they are mosquitoes and not lions and tigers.

அதிமுக, திமுக ஆகியவை சிங்கம், புலி அல்ல கொசுக்கள் தான் என்பதால் விரல்களால் நசுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பரப்புரை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இங்குள்ள மக்களின் ஏழ்மை, கொடுமை, சாக்கடை, குப்பையை அகற்றப்படாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

5 வருடத்தில் இரண்டு வாரம் மட்டுமே குத்தைகை எடுத்து, ஜூஸை உறிஞ்சிவிட்டு சக்கையை போட்டு போய்டுவாங்க, அதனால் தான் சாக்கடை ஓடுகிறது, உங்களை கொசுக்கள் அடிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும், அவர்கள் பெரிய சிங்கம், புலி அல்ல, கொசுக்கள் மாதிரித்தான், அந்த கொசுக்களை நீங்கள் விரல்களால் நசுக்க வேண்டும். அதுவும் வரும் 6ம் தேதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.