பொதுப்பணித்துறையில் புதியதாக கோவை மண்டலம் உருவாக்கம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

The TN Govt has issued an order ordering the creation of a new Coimbatore Zone in the Public Works Department.

கோவை:பொதுப்பணித்துறையில் புதியதாக கோவை மண்டலம் உருவாக்கம் செய்ய உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆக.27 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது,பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு பொதுப்பணித்துறையில் புதிய மண்டலம் உருவாக்கப்படும் என்ற அறிப்பினை வெளியிட்டார்.

இந்நிலையில்,பொதுப்பணித்துறை,சென்னை மண்டலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அலுவலங்களை மறுசீரமைத்து பணி அடிப்படையிலும் மற்றும் புதிய பணியிடங்களை தோற்றுவித்தும்,கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக மண்டலம் உருவாக்குவதற்கு தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அதன்படி,கோவை,நீலகிரி,திருப்பூர்,ஈரோடு,சேலம்,நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி,கோவை மண்டலம் புதிதாக உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

unknown node