Election Manifesto: கோவை மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அந்த தொகுதி வேட்பாளர் அண்ணாமலை. தமிழகத்தில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி களமிறங்கியுள்ள நிலையில், கோவை மக்களவை தொகுதியில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு […]
Annamalai: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு. மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்றிரவு கோவை ஆவாரம்பாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், திமுகவினர் காவல்துறையிடம் சென்று முறையிட்டனர். அதாவது நேரம் கடந்து அண்ணாமலை பிரச்சாரம் செய்வதாக குற்றசாட்டியுள்ளனர். இதன்பின், பாஜக – திமுகவினர் இடையே மோதல் […]
Election2024: கோவையில் அண்ணாமலை பரப்புரையின்போது திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டு வரும் நிலையில், கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் கோவை ஆவரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட்டபோது திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, […]
Annamalai: என் மீது பயம் இருப்பதால் என்னை ஆட்டுக்குட்டி என விமர்சனம் செய்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அண்ணாமலை கூறியதாவது, […]
Annamalai : அரசியலில் விடுமுறை எடுக்காமல் இருக்கிறேன். என் அம்மாவை பார்த்து 2 மாசம் ஆயிடிச்சு -அண்ணாமலை. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக தொண்டர்கள் கலந்து கொண்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், அரசியல் கட்சியுடன் சண்டை போடுவதற்காக […]
High Court :கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் (ரோடு ஷோ) பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது. இதற்கு எதிராக கோவை மாவட்ட பாஜக சார்பில் சென்னை உயநீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்ற நிலையில், பேரணிக்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பினார். Read More – பிரதமர் மோடியின் பேரணிக்கு […]
PM Modi : கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வாகனப் (ரோடு ஷோ) பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து காவல்துறை கூறியதாவது, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்கவில்லை என்றும் பிரதமருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தாலும் அனுமதி மறுத்திருப்பதாக விளக்கமளித்தது. Read More – இந்த வருடத்தில் 5வது முறை.! பிரதமர் மோடியின் இன்றைய தமிழக பயணம்.! மேலும், […]
Bomb Threat: சென்னை மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள தி பிஎஸ்பிபி என்ற தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. READ MORE – ஒரே இமெயில் ID மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! சென்னை காவல் ஆணையர் விளக்கம்.! இதனையடுத்து, மாணவர்கள் விரைவாக […]
தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தமிழகத்தின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து இன்று (ஜனவரி 9) மதியம் 1 மணி வரை 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, […]
ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். அதன்படி, தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்பாக சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, சேலம், விருதுநகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சென்னை அமைந்தகரையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம், ஈரோடு கருப்பன் வீதியில் உள்ள சிஎம்கே கட்டுமான நிறுவனம், அலுவலகம், அந்நிறுவன அதிபர்கள் […]
கோவை காந்திபுரத்தில், 100 அடி சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 27-ஆம் தேதி இரவு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. கோவையில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் இந்த சாலையில் பல்வேறு பிரபலமான பெரிய கடைகள் முதல் பல்வேறு சிறிய கடைகள் வரையில் இயங்கி வருகின்றன. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இந்த பகுதியில் இயங்கி வரும் நகைக்கடையில் இந்த கொள்ளை சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையை மர்ம கும்பல் நகைக்கடை சுவற்றை […]
ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக கடனில் சிக்கி கோவையை சேர்ந்த சங்கர் என்கிற மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் விளையாட வேண்டாம் எனவும், அதற்கு அடிமையாக வேண்டாம் என அரசு அறிவுறுத்தினாலும் ஆன்லைன் சூதாட்டத்தால் நடக்கும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் பெரும்பாலும் படித்த இளைஞர்கள் உயிரை மாய்த்துகொள்வது இன்னும் வேதனை அளிக்கிறது. கோவை, உப்பிலிபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சங்கர், 29வயதான இவர் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஆன்லைன் சூதாட்டம் […]
கோவை கார் வெடி விபத்தில் கைதான 3 பேருக்கு நீதிமன்ற காவல் டிசம்பர் 27 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்தான வழக்கினை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் முதலில் முகமது தல்கா , முகமது அசாருதீன் , முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ் இஸ்மாயில் , அப்சர்கான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் […]
கோவையில் பழுதான சாலைகள் அனைத்தும் புதுப்பிக்க 211 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டு விட்டது. – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இன்று கோவையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார், அவர் பேசுகையில், இன்று ஒரே நாளில் முதல்வர் உத்தரவின் பேரில் 1.32 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்ப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கோவையில் பழுதான […]
கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து நடைபெற்ற விசாரணையில் முபின் வீட்டில் 76 கிலோ வேதி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 109 வேதிப்பொருட்கள் இருந்ததாக தகவல் வெளியாகின. இதனை அடுத்து போலீசார் விசாரணையில் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் கோவை செல்கிறார். கோவையில் நடைபெற்ற கார் வெடிவிபத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக தரப்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இது தீவிரவாத தாக்குதல் என்றும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில் பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் கோவை செல்லவுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் […]
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பரோஸ் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் இருப்பவர்களை சந்தித்து பேசியுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை அதிகாலை கோவை, உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் எரிந்து சேதமான கார், மற்றும் முபின் வீட்டில் சோதனையிட்ட போலீசாருக்கு பல்வேறு தடயங்கள், 76கிலோ வேதிப்பொருட்கள் கிடைத்திருந்தது. இதனை […]
கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 நபர்கள் வீடுகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்று கிழமை நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ஜமேஷ் முபின் உடன் தொடர்புடையதாக முதற்கட்டமாக முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் என 5 பேரை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு, அப்சர் கான் என்பவர் 6வது […]
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை மக்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் தீபாவளியை கொண்டனர். – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்தும், அதன் மீதான தமிழக அரசு முன்னெடுத்துள்ள துரித நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், கார் சிலிண்டர் வெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 12 […]
அசம்பாவிதங்கள் நடைபெறப்போவது குறித்து ஏதேனும் தகவல் முன்கூட்டியே தெரிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. – கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். கோவையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்து கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். பின்னர் நடந்த விசாரணையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தமிழக காவல்துறை மேற்கொண்டு வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அமைப்பு […]