பொதுப்பணித்துறையின் கட்டுமான பணிகளில் சிவில் மற்றும் மின் பணிகளுக்கு தனித்தனியே ஒப்பந்தம் விடப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் 27.08.2021 அன்று சட்டப் பேரவையின் அவையில் பொதுப்பணித் துறைக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது,பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டிற்குள்ள சிவில் மற்றும் மின்சாரப் பணிகள் தனித்தனியாக ஒப்பந்தம் (தனி ஒப்பந்தம்) மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில்,பொதுப்பணித்துறையில் சிவில் மற்றும் மின்சாரப் […]
கோவை:பொதுப்பணித்துறையில் புதியதாக கோவை மண்டலம் உருவாக்கம் செய்ய உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆக.27 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது,பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு பொதுப்பணித்துறையில் புதிய மண்டலம் உருவாக்கப்படும் என்ற அறிப்பினை வெளியிட்டார். இந்நிலையில்,பொதுப்பணித்துறை,சென்னை மண்டலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அலுவலங்களை மறுசீரமைத்து பணி அடிப்படையிலும் மற்றும் புதிய பணியிடங்களை தோற்றுவித்தும்,கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக […]
சென்னை:பொதுப்பணித்துறையில் டெண்டர் ஒப்புதல் வழங்க அதிகாரிகளுக்கு அதிகார வரம்பு உயர்த்தி தமிழக அரசு அரசாணை. தமிழக சட்டமன்றத்தில் கடந்த 27.08.2021 அன்று நடந்த பொதுப்பணித் துறை மானியக்கோரிக்கை தொடர்பான விவாதத்தின்போது,தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஒப்புதலுக்கான தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அதிகார வரம்பு உயர்த்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இந்நிலையில்,பொதுப்பணித்துறையில் தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஒப்புதல் வழங்க தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அதிகார வரம்பு […]
தமிழக அரசின் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றை இரண்டாக பிரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய இரண்டும் தனித் துறைகளாக செயல்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,நீர்வளத் துறை தொடர்பானவை நீர்வள அமைச்சருக்கும், பொதுப்பணித் துறை தொடர்பானவை பொதுப்பணித் துறை அமைச்சருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “பொதுப்பணித் துறை மற்றும் நீர்வளத் துறைக்கு இடையே, துறையின் நிர்வாகப் பணிகள் பிரிக்கப்பட வேண்டும் என, […]