கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 நபர்கள் வீடுகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்று கிழமை நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ஜமேஷ் முபின் உடன் தொடர்புடையதாக முதற்கட்டமாக முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் என 5 பேரை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு, அப்சர் கான் என்பவர் 6வது […]
கோவை மாநகர் முழுவதும் காவல்துறை முழுமையான பாதுகாப்பை அளித்து வருகிறது. கேமிராக்கள் இல்லாத இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகருக்குள் வரும் நுழைவுகளில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. – கோவை மாநகர் ஆணையர் பாலகிருஷ்ணன்தகவல். நாடுமுழுவதும், தேசிய புலனாய்வு பிரிவினர் என்.ஐ.ஏ பாப்புலர் பிராண்ட் ஆ இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைaக்கு எதிராக பலர் போராட்டம் நடத்தினர். இதே போல கோவையிலும் சோதனை […]
கோவை மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட பிரபுவின் வழக்கில், முக்கிய குற்றவாளி பிரபுவின் கள்ளக்காதலி கவிதா எனபதும், தனது ஆண் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து இந்த படுபாதக செயலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் குப்பை தொட்டியில் ஒரு மனிதரின் கை மட்டும் 6 நாட்களுக்கு முன்னர் கிடைத்தது. அதனை கொண்டு விசாரிக்கையில், இது கடந்த 15ஆம் தேதி காணாமல் போன அழகு நிலைய ஊழியர் பிரபு என்பவரின் கை என்பது தெரியவந்துள்ளளது. மேற்கொண்டு […]
நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் கனமழையும் மற்ற குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் பெரும்பாலும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், தற்போது, வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின் படி, நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. \ மேலும், […]
கோவை:வால்பாறையில் இன்றும்,நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக கோவை மாவட்டத்தின் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் (ஜுலை 7),நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு விடுத்துள்ளார். மேலும்,தொடர் மழை பெய்து வருவதால் வாகன […]
கோவை:பொதுப்பணித்துறையில் புதியதாக கோவை மண்டலம் உருவாக்கம் செய்ய உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆக.27 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது,பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு பொதுப்பணித்துறையில் புதிய மண்டலம் உருவாக்கப்படும் என்ற அறிப்பினை வெளியிட்டார். இந்நிலையில்,பொதுப்பணித்துறை,சென்னை மண்டலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அலுவலங்களை மறுசீரமைத்து பணி அடிப்படையிலும் மற்றும் புதிய பணியிடங்களை தோற்றுவித்தும்,கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக […]
கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை எவ்வித தளர்வுகளும் இன்றி முழுஊரடங்கு தற்போது அமலுக்கு வந்ததுள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் 31.7.2020 வரை தேவையான தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5..7.2020 மற்றும் 12 .7.2020 மேலும் 19.7.2020 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வுமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகளும் குணமடைந்து […]
மதுரை, கோவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், நேற்று (மே2) மட்டும் 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 29 பேர் குணமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 1,341 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மதுரை மற்றும் கோவையில் நேற்று ஒரு நாளில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 88ஆக உயர்ந்துள்ளது. கோவையில் பாதிக்கப்பட்டோரின் […]
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய டெல்லி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த தாக்குத்துதலுக்கு எதிராக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரி போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மேலும், இந்தியா முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]
நமது உடலில் ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் கடவுளை நம்புகிறோமோ இல்லையோ மருத்துவரைதான் அனைவரும் நம்புகிறோம். ஆனால், அப்படிப்பட்ட உயர்ந்த சேவையை செய்யும் மருத்துவமனை ஊழியர்கள் சில நேரத்தில் செய்யும் சிறு அலட்சிய தவறு, பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோவை, எம்.எஸ்.ஆர் புரம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போடும்போது, தவறுதலாக அந்த ஊசியின் சிறுபகுதி அந்த குழந்தையின் உடலில் இருந்துள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி […]
கோவை கொடிசியா மைதானத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் பன்னாட்டு கண்காட்சியை மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி தொடங்கி வைத்தார் கோவை மாவட்டத்தில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் பன்னாட்டு கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியை மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி தொடங்கி வைத்து பேசினார். இந்த கட்சட்சியில் ஏராளமான கைத்தறி தொழில் சார்ந்த பொருட்கள் காட்சி படுத்தபட்டு இருந்தது.கண்காட்சியில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு துறை சார்ந்த கண்காட்சியும் காண்போரை […]
கோயம்புத்தூர் அத்தார் பள்ளிவாசலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர். கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளி வாசலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு தொழுகை செய்யப்பட்டது. தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் நிதி உதவியும் செய்தனர்.5 லட்ச ரூபாய் மதிப்பிலான அரிசி,பாய் , போர்வை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வேதாரண்யம் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றனர்.புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் , இது போன்ற இன்னல்கள் வரும் நாட்களில் […]
ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கோவையில் அண்மையில் நடைபெற்ற பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து அரசு, அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மேலாண் மைக் குழு அமைத்து பெற் றோர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ வேண்டும். ஒரு ஆசிரியருக்கு ஒரு வகுப்பறையும், ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் நியமிக்க வேண் டும். ஒன்றாம் வகுப்பு முதல் 5 […]
தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான ஆண்டு இறுதி பயிற்சி முகாம் கோவையில் ஞாயிறன்று துவங்குகிறது. இதுகுறித்து தேசிய மாணவர் படை முகாமின் மக்கள் தொடர்பு அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸாண்டர் கூறுகையில், கோவை தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படை பிரிவு சார்பாக தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் அக்.21 முதல் அக்.30 வரை சிங்காநல்லூர் ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது. கர்ணல் சம்சீர் சிங் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் கோவை அரசு கலைக்கல்லூரி, […]
விவசாய நிலங்களை அழித்து கரூர்-கோவை ஆறு வழிசாலை அமைக்க கூடாது என வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது கரூர் முதல் கோவை வரை ஆறு வழி பசுமை சாலை (என்.ஹெச் 67) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி கோவை கிழக்கு புறவழிச்சாலை அமைக்கவும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை திட்டத்தால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் […]
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமைக்கப்படும் என மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை உறுதியளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படாது எனக் கூறினார். விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் ஏற்க மாட்டோம் எனக் கூறிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் எனத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் திராவிட […]
கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு வலி தெரியாமல் இருக்க வலி நிவாரண மருந்து கொடுக்கப்படுகிறது. 5 மில்லி அளவு கொண்ட மிகச்சிறிய பாட்டிலில் இருக்கும் இந்த மருந்தின் விலை ரூ.5 மட்டும்தான். குறைந்த விலையில் அதிகபோதை கிடைப்பதால் இதை வாங்க போதைப்பிரியர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சில நாட்களுக்கு முன்பு இந்த மருந்தை திருடும்போது, கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 24) […]
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அவற்றின் பாதிப்புகள் பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரணை நடத்தி வருகிறார். அதன்படி கோவையில் 5-ம் கட்ட விசாரணை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று தொடங்கியது. முன்னதாக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் கூறியதாவது:- கோவையில் 5-ம் கட்ட விசாரணை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. அந்த விசாரணை நாளையுடன்(வெள்ளிக்கிழமை)முடிவடைகிறது. கோவையை பொறுத்தவரை 50 பேர் பிரமாண வாக்குமூலம் […]
கோவைப்புதூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த பானு என்பவரது மகன் அப்துல்லா (வயது 17), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் சூர்யன் (17). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் தமிழக-கேரள எல்லையான வாளையாருக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள அணையில் 2 பேரும் குளித்தனர். எதிர்பாராதவிதமாக அவர் கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில், நீரில் […]
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகன் சக்திவேல்(வயது 16). பிளஸ்-2 மாணவர். இவர் கடந்த 19-ந் தேதி இரவு 7 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். வனவாசி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சக்திவேல் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் […]