தென் தமிழக மாவட்டங்களாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, மதுரை,விருதுநகர்,தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என […]
கோவை மாவட்டத்தில் ரவுடிகள் செயல்பாட்டை கட்டுப்படுத்த ஆபரேசன் மின்னல் வேட்டை எனும் பெயரில் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் மாவட்டம் முழுவதும் ரவுடிகளின் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கொடுத்த உத்தரவின் பெயரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக காவல்துறையினர் மேற்கொண்ட ‘மின்னல் வேட்டை’ எனும் அதிரடி நடவடிக்கையின் கீழ் 88 ரவுடிகளின் மீது […]
கோவை மாவட்ட தூய்மை பணியார்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அவர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 3,500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வெகு நாட்கள் கோரிக்கையான வேலை நேரம், வார விடுமுறை, பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். தூய்மை பணியாளர்களின் 2 நாள் போராட்டம் இன்று […]
கோவையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்தும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்தும், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ சோதனையை அடுத்து, கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கோவையை சுற்றி காவலர்கள் மட்டுமின்றி, அதிரடி படையினர், கமாண்டோ படையினர் பாதுகாப்பிற்காக குவிந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது, மேற்கு மண்டலா ஐஜி சுதாகர் தலைமையில் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் […]
கோவை மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட பிரபுவின் வழக்கில், முக்கிய குற்றவாளி பிரபுவின் கள்ளக்காதலி கவிதா எனபதும், தனது ஆண் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து இந்த படுபாதக செயலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் குப்பை தொட்டியில் ஒரு மனிதரின் கை மட்டும் 6 நாட்களுக்கு முன்னர் கிடைத்தது. அதனை கொண்டு விசாரிக்கையில், இது கடந்த 15ஆம் தேதி காணாமல் போன அழகு நிலைய ஊழியர் பிரபு என்பவரின் கை என்பது தெரியவந்துள்ளளது. மேற்கொண்டு […]
பொது இடங்களில் குப்பை கொட்டினால், 1000 ரூபாய் அபராதம். அதனை ஆதாரத்துடன் வீடியோ எடுத்து காட்டினால் வீடியோ எடுத்த நபருக்கு சன்மானமாக 500 வழங்கப்படும் என காட்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவி அறிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு அருகே, காட்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவியின் சூப்பர் ஐடியாவால் அந்த தெருவே சுத்தமாக மாறியுள்ளது. காட்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவி காயத்திரி பாலகிருஷ்ணன் , அண்மையில் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சியில் ஒரு சில வார்டில் மட்டும் ஒரு […]
கோயம்புத்தூர் மாவட்டம்,வடவள்ளி நகரம் அருகே, இருக்கும் பம்மனாம்பாளையத்தில், தனியாக வசித்து வந்த 80 வயது முதியவர் பெரிய ராயப்பன் எனும் நபரை கட்டிப்போட்டு ஒரு காதல் ஜோடி வீட்டில் கொள்ளையடித்து தப்பிக்க முயற்சித்து பிடிபட்டுள்ளனர். அதாவது, பெரிய ராயப்பன் மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி ஆகியோர் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவரது மகன் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் தனியாக இருப்பதை புத்தகம் விற்கும் சாக்கில் நோட்டம் விட்ட காதல் ஜோடிகளான, 23 வயதான […]
பெங்களூரில் இருந்து மாலே (மாலத்தீவு) நோக்கி 92 பயணிகளுடன் சென்ற கோ பர்ஸ்ட் விமானம், புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இன்ஜின் அதிக வெப்பம் குறித்து எச்சரிக்கை மணி அடித்ததை அடுத்து, கோவை விமான நிலையத்தில் இன்று மதியம் 12 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. கோயம்புத்தூர் வான்வெளியைக் கடக்கும்போது ஜி843 விமான பைலட் ‘மேடே’ அழைப்பு விடுத்ததால் கொச்சின் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (சியால்) ஏடிசி இந்த அருகிலுள்ள விமான நிலையமான கோயம்புத்தூருக்கு விமானத்தை இயக்கிய […]
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அநேக இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது . தற்போது வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு […]
சிறுமுகை எஸ்ஆர்எஸ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். பொறியாளரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், 2019ல் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்மீனாம்பிகை நிதி முறைகேடு, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு ஐபிஎஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்ததார். விஜய்குமாருக்கு எதிரான ஆதாரங்களை மனித உரிமை ஆணையம் கேட்டது, அதை இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தாக்கல் செய்யவில்லை. விசாரணைக் குழு முன்வைத்த கேள்விகளுக்கு அவளிடம் […]
கோவை:பொதுப்பணித்துறையில் புதியதாக கோவை மண்டலம் உருவாக்கம் செய்ய உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆக.27 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது,பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு பொதுப்பணித்துறையில் புதிய மண்டலம் உருவாக்கப்படும் என்ற அறிப்பினை வெளியிட்டார். இந்நிலையில்,பொதுப்பணித்துறை,சென்னை மண்டலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அலுவலங்களை மறுசீரமைத்து பணி அடிப்படையிலும் மற்றும் புதிய பணியிடங்களை தோற்றுவித்தும்,கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக […]
தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது. பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு. கோயம்புத்தூரில் உள்ள சுற்றுலா தலங்களைக் காண்போம்… கோயம்புத்தூர் : ஆனைமலை விலங்குகள் சரணாலயம் அவினாசி கோயில் […]
கோயம்புத்தூர் மாவட்டம் மத்தம்பாளையத்தில் தேவாலயத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயம் என தகவல்.
கோவை- சென்னை ரயிலில் ஈசா லிங்கத்தை அடையாளமாக்கியது ரயில்வே. உடனடியாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் அறிவித்தது.மேலும் சில சமூகநீதி இயக்கங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். முற்போக்கு எண்ணம் கொண்ட பத்திரிகையாளர்கள் முக்கியத்துவம் அளித்து தங்கள் ஊடகங்களில் வெளியிட்டனர்.தீக்கதிர் உள்ளிட்ட பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களிலும் போராளிகள் கொந்தளித்தனர். ரயில்வே நிர்வாகம் பணிந்தது லிங்கம் மாற்றப்பட்டு கோவை ரயில் நிலையத்தின் படம் இடம்பெற வைத்தது…
கோயம்புத்தூர்; வெரைட்டி ஹால் பகுதியை அடுத்த, தாமஸ் என்ற வீதி உள்ளது இதில் ஏராளமான மொத்த கொள்முதல் மற்றும் விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு அழகு சாதன பொருள்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான முக்கிய பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யபட்டு வருகின்றன. இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
கோயம்புத்தூர்; விமான நிலையத்தில் இருந்து ஏர் அரேபியா என்ற விமானம் , ஓடுதளத்தில் பறந்து வந்த மயில் மீது மோதி விமானம் சேதம் அடைந்தது. இந்த விபத்தையடுத்து,விமானி பயணிகளை பத்திரமாக தரை இறங்கினார். ஷார்ஜா செல்ல வேண்டிய இந்த விமானத்தில் 163 பயணிகள் இருந்தனர்.தற்போது இந்த பயணிகள் ஓட்டலில் தங்க வைக்கபட்டு உள்ளனர். விமானத்தை சரிசெய்ய, சென்னையில் இருந்து தொழில்நுட்ப குழு கோவை விரைந்துள்ளது.