#Breaking: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்பு!

It has been reported that BJP leader L Murugan from Tamil Nadu is likely to become the Union Minister.

தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2வது முறையாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இன்று அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எல் முருகன் பங்கேற்றதால் அவர் அமைச்சராகிறாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சராக உள்ளவர்கள் பிரதமரின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், எல் முருகனும் பங்கேற்றுள்ளார்.

எனவே, இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது புதிய அமைச்சர்கள் யார் என்று பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல் முருகன் மத்திய அமைச்சரானால் தமிழக பாஜக தலைவராக வேறொருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.