திரிபுராவில் ஜன 5-ல் பாஜக தேர்தல் ரதயாத்திரையை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா. தேர்தல் நடக்கவுள்ள நிலையில், திரிபுராவில் ஜனவரி 5-ல் பாஜக தேர்தல் ரதயாத்திரையை தொடங்கி வைக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ரதயாத்திரையில் சுமார் 200 பிரச்சார கூட்டங்களை நடத்தவும் 10 லட்சம் மக்களை சந்திக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. 60 சட்டமன்ற தொகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் தர்மாநகரில் துவங்கி ஜனவரி 2 வரை ரதயாத்திரை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு இணை அமைச்சரின் பதில் அரசின் செயலின்மையையே காட்டுகிறது என சு.வெங்கடேசன் எம்பி பதிவு. இந்த ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், கடந்த 4 ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது குறித்து சு.வெங்கடேசன் எம்பி கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். 99 படகுகள் கைப்பற்றப்பட்டதில் […]
நீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சு. சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழ் மொழி தொன்மையான மொழி. அனைத்து நீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கூறினார். மேலும், சாமானியர் புரியும் வகையில் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக மாநில […]
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு. ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது மத்திய அரசு. அதன்படி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்தார். தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் என அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 2022 முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், டெல்லி, […]
பஞ்சாப் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜிஜு, பாஜக தலைவர் சுனில் ஜாகர் மற்றும் பாஜக பஞ்சாப் தலைவர் அஸ்வனி சர்மா ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸை-யும் (பிஎல்சி) பாஜகவுடன் இணைத்துள்ளார் கேப்டன் அமரீந்தர் சிங். நாட்டின் சரியான […]
மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு மத்திய அமைச்சரை ஒப்புதல். 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான உத்தரவாதங்களில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்துக்கு பின் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். அதன்படி, U-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி அக்டோபர் 11 முதல் 30 வரை […]
மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு மாறினால் டிக்கெட் விலை 30% குறையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு. ரூ.2,300 கோடி மதிப்பிலான ஐந்து வழி சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பொதுப் போக்குவரத்து அமைப்பில் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மாநில போக்குவரத்து கழகங்கள், மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு […]
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசு பெற்ற மொத்த மதிப்பான ரூ.1,50,173 கோடியில் 58.65% ஏலம் எடுத்தது ரிலையன்ஸ் ஜியோ. இந்தியா தனது முதல் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை கடந்த 7 நாட்களாக நடத்தி முடித்திருந்தது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 5ஜி ஏலம் நேற்று நிறைவு பெற்றது. இதில், ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த ஏலத்தின் இறுதியில் 4 நிறுவனங்கள் ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதாகவும், ரிலையன்ஸ் […]
விரைவில் மின்சாரத்தில் இயங்கும் டிராக்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு. மகாராஷ்டிரம் மாநிலம் புனேவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மின்சார ஸ்கூட்டர்கள், கார்கள், பேருந்துகள் போன்று, மின்சார டிராக்டர், லாரிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். எத்தனால், மெத்தனால் போன்று, மின்சாரமும் மாற்று எரிசக்தியாக பெருமளவில் பயன்படுத்தப்படும். எரிபொருள் தேவையில் தன்னிறைவை அடைவதோடு, நாட்டில் சுற்றுசூழலுக்கு […]
இ-சந்தை கொள்முதல் திட்டம் மூலம் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்கள் வெளிப்படையாக உரிய விலையில் விற்கப்படும் என அமைச்சர் தகவல். கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை மத்திய அரசின் இ-சந்தையில் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், இ-சந்தை கொள்முதல் திட்டம் மூலம் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்கள் வெளிப்படையாக உரிய விலையில் விற்கப்படும். GeM (Government e-Marketplace) போர்ட்டலை அறிமுகம் செய்த பிறகு, சுய […]
மனைவியர் தினம் கொண்டாட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள். மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, அன்னையர் தினத்துடன், மனைவி யர் தினத்தையும் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார். தாய் உருவாக்கி தந்த வாழ்க்கையின் துணையாக முக்கிய கட்டத்தில் மனைவி வருவகிறார். ஒரு தாய் ஒரு […]
நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின் பற்றாக்குறை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை. நாடு முழுவதும் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின் பற்றாக்குறை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் மின்துறை அமைச்சர் ஆர்கே சிங், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் நிலக்கரி பற்றாக்குறை குறித்து […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் நாளை சென்னை வருகிறார். நாளை இரவு சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர், ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப் மையத்தில் தங்குவதாக தகவல் கூறப்படுகிறது. இதையடுத்து புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க 24ம் தேதி ஹெலிகாப்டரில் செல்லும் மத்திய அமைச்சர் 390 காவலர்களுக்கான பணி ஆணை உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை தொடக்கி வைக்க உள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா வருவதையொட்டி, புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து […]
முரசொலி அலுவலக இடம் வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு. முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ளதாக எல் முருகன் கருத்து தொடர்பான வழக்கில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் ஏப்ரல் 22-ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்தபோது வேலூரில் நடந்த பொதுக்கூட்டம் […]
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக கேரள முதலமைச்சர் குற்றசாட்டு. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கு எதிரான வகையில் அமித் ஷாவின் கருத்து உள்ளது என குற்றசாட்டியுள்ளார். புதிய கல்வி கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மத்திய […]
பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது என ஓபிஎஸ் அறிக்கை. இந்தி மொழி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றாய் வெளியிட்டுள்ளார். அதில், இந்தி மொழி தேவையெனும் பட்சத்தில் மனமுவந்து கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம் என்றும் அதே சமயத்தில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறி இருக்கிறார்கள். […]
அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவு. ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி மொழியை பேச வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்திய மொழியான இந்தி தான் இருக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் […]
ஒரேநாடு- ஒரேமொழி எனும் ஃபாசிசப் போக்கை வலுவாக திணிப்பதற்குரிய ஆபத்தான முயற்சி என திருமாவளவன் ட்வீட். ஆங்கிலத்திற்கு மாற்றாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான மொழியாக ஹிந்தியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி மொழியை பேச வேண்டுமெனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது […]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் டெல்லியில் சந்திப்பு. டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஆர் பாலு எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மத்திய நிதியமைச்சருடனான சந்திப்பில், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க கோரி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, டெல்லி […]