ஸ்டாலின் தான் வராரு... மக்கள் எல்லாம் உஷாரு – நடிகை விந்தியா கடும் விமர்சனம்

Actress Vindhya has said that if you type "DMK" in Google, the DMK attack will come.

கூகுளில் திமுக என டைப் செய்து பார்த்தாலே திமுக அட்டாக் தான் வரும் என நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் ராதபுரத்தில் அதிமுகா வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட நடிகை விந்தியா, ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு பாடலை மாற்றி பாடி திமுகவை கடும் விமர்சனம் செய்துள்ளார்.

அதாவது, நல்ல மனசாட்சியுடன் இருப்பவர்கள் எப்படி அந்த பாடலை எழுதிருப்பார் என்று கூறி, ஸ்டாலின் தான் வராரு, மக்கள் எல்லாம் உஷாரு, திமுக வந்த பேஜாரு பிரியாணிக்காக உழைப்பாரு, உதைப்பாரு, அடிப்பாரு, புள்ளையை மட்டும் வளர்ப்பாரு இதுதான் அவர் வரலாறு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கூகுளில் திமுக என டைப் செய்து பார்த்தாலே திமுக அட்டாக் என்று அவர்களுடைய லிஸ்ட் தான் வரும் என்றும் கூகுளுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு குடிமக்களுக்கும் தெரியும் திமுகவின் வரலாறு என்ன என்பது என தேர்தல் பரப்புரையில் விமர்சித்துள்ளார்.