காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.எஸ்.பாலி காலமானார் ....!

Senior Congress leader GS Polly has passed away due to ill health.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.எஸ்.பாலி உடல்நல குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி.எஸ்.பாலி அவர்கள் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 67 வயதுடைய இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அவரது மகன் ரகுபீர் சிங் பாலி டுவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார்.

அதில் தனது அன்புக்குரிய தந்தை மற்றும் உங்கள் அனைவருக்கும் அன்பான ஜி.எஸ்.பாலி நம்முடன் இல்லை என கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறி உள்ளார். இவரது மறைவுக்கு  காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.