திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னடைவு.!

In the Tiruvottiyur constituency of Chennai, Seeman has secured the 3rd position with the AIADMK candidate leading.

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வரும் நிலையில் சீமானுக்கு பின்னடைவு.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், 129 இடங்களில் திமுகவும், 103 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி பின்னடைவையே சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்கிய நிலையில், பின்னடைவை சந்தித்துள்ளார். அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.குப்பன் முன்னிலை வகிக்கிறார். மேலும் முதல் சுற்றில் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு 3வது இடம் பெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த சுற்றுகள் அக்கட்சிக்கு எப்படி அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.