Election2024 : சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த கால தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தை பொது சின்னமாக கொண்டு தேர்தலை சந்தித்து வந்தனர். கடந்த முறை சட்டமன்ற தேர்தல் வரையில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்ட்டியிட்டு தமிழகம் முழுவதிலும் 6.5 சதவீத வாக்கு சதவீதத்தை பெற்றது. Read More – கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை… இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு.! அதே போல வரும் மக்களவை தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டு தேர்தல் ஆணையத்தை […]
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றைய தினம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியே நடுவே, பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பும் போது, சில ரசிகர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என […]
வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் சீமான் ஆஜர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2017-ல் சேலம் பொது கூட்டத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சீமானுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து ஆஜரானார்.
தனியார் நிறுவனங்களை கொண்டு வருவதை கேவலமாக பார்க்கிறேன் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதில், தலைமை நீதிபதி மற்றும் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மற்ற 3 நீதிபதிகள் 10% இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தனர். பெரும்பான்மையான நீதிபதிகள் ஆதரவு தெரிவித்ததால் 10% இட ஒதுக்கீடு உறுதியானது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு […]
விசிக, இடதுசாரிகள் சார்பாக இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி. சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. விசிக, இடதுசாரிகள் சார்பாக இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு காங்., மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இணைந்து இன்று மாலை 4 மணிக்கு மனித சங்கிலி நடத்துகின்றனர். மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க திமுக தொண்டர்களுக்கு விசிக தலைவர் […]
அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில் திமுகவினரின் தலையீடு கண்டனத்திற்குறியது என சீமான் அறிக்கை. அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுகவினரின் தலையீட்டின் பேரில் நடைபெறும் இத்தகைய முறைகேடுகளுக்கு தமிழ்நாடு அரசு […]
ராஜராஜ சோழன், பிரபாகரனின் “உண்மை” வரலாறு படமாகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலை வடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவார் என அறிவித்துள்ளார். […]
தடையை நீக்கினால் விரும்பத்தகாத செயல்களுக்கு யார் பொறுப்பேற்பது? நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டம் ஒழுங்கை காரணங்காட்டி பேரணிக்கு அளித்த தடையை நீதிமன்றம் நீக்கினால், அதனால் விளையக்கூடிய விரும்பத்தகாத செயல்களுக்கு யார் பொறுப்பேற்பது? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணியை நவம்பர் 6 அன்று நடத்திக் கொள்வதற்கு அனுமதியளித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் […]
PFI மீதான தடையானது நாடெங்கிலும் வாழும் இசுலாமிய மக்களிடையே உள்ளக் குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது என சீமான் கண்டனம். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான மத்திய அரசின் தடை பாசிசப் போக்கின் உச்சம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்குத் தடை விதித்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் அதிர்ச்சி தருகிறது. நாடறியப்பட்ட […]
பெண்கள் பேருந்தில் ஓசியில் பயணம் செய்வதாக அமைச்சர் பொன்முடி பேசியதற்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களை பார்த்து, நீங்கள் ஓசி-யில் தானே பேருந்தில் செல்கிறீர்கள்? வாய திறங்க… குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் வாங்குனீங்களா? என கேட்டிருந்தார். இது பெண்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் பேச்சிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே செய்தவற்றை ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் சொல்லி சொல்லி காட்டியே வாக்கு கேட்கும் […]
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இத்தகைய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என சீமான் அறிக்கை. மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் அலட்சியப்படுத்தி அவமதிப்பதுதான் சமூக நீதியா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆதித்தொல்குடியான குறவர் சமூக மக்களின் உரிமைகளுக்காக ஆறு நாட்களாகப் பட்டினிப்போராட்டம் நடத்திய வனவேங்கைகள் கட்சியின் தலைவர் அன்புத் தம்பி இரணியன், தங்களது கோரிக்கைகள் குறித்தான மனுவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களிடம் அளிக்கச்சென்றபோது […]
சவுக்கு சங்கரின் 6 மாத சிறைத்தண்டனையை மறுபரிசீலனை செய்து விடுவிக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை. தனி நபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல, தம்பி சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீதித்துறை குறித்து விமர்சித்ததற்காக, வலையொளியாளர் தம்பி சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீதிமன்றங்கள், […]
தமிழில் அர்ச்சனை என்பது பெயர் அளவிலேயே உள்ளது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றசாட்டு. தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழ்நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கஞ்சா, குட்கா, ஹெராயின் போன்றவை போதை பொருட்கள் என முருகன் ஆணையாக ஒத்துக் கொள்கிறேன். ஆனால் டாஸ்மாக் மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள […]
குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் என சீமான் கேள்வி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடிகளின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்புகளை வழங்குவது தான் சமூக நீதி. குடிவாரி கணக்கெடுப்பை ஏன் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் எடுக்கவில்லை. குடிவாரி கணக்கெடுப்பை எடுங்கள், இல்லை சமூக நீதி என பேசுவதை விடுங்கள். குடிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் ஒரே நாடு, ஒரே தேர்தல், உள்ளிட்டவைகளை மத்திய அரசால் நிறைவேற்ற […]
தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் கோரிக்கைகளை ஏற்று உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் கோரிக்கை. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் கடத்திவரும் திமுக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களுக்கு உயிர் காக்கும் நல்ல குடிநீர் வழங்குவதற்கான பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள், அடிப்படை […]
உண்மையைச் சொன்னால் கோவித்துக் கொள்ளாமல் அதற்கான பதிலை அமைச்சர் வழங்க வேண்டும் என சீமான் பேட்டி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அன்பும் பாசமும் அதே அளவு இருந்தாலும் 10 மணி நேரம் கரண்ட் இல்லை. தமிழகத்தில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் திமுக, அதிமுகத்தான் ஆண்டுள்ளது. தமிழக்தில் உற்பத்தியில் முதலீடு செய்யவில்லை, வாங்குவதில் தான் முதலீடு செய்யப்படுகிறது. […]
ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறுவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். கடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. புதிய ஓய்வூதியத் திட்டதில் ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என தெரிவித்திருந்தார். பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என தெரிவித்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் […]
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கம் குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்துகள் அதிர்ச்சி அளிக்கின்றன என சீமான் பதிலடி. சென்னை கல்லூரி ஒன்றில் நடைபெற்ற புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என குற்றசாட்டினார். மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது. இந்த அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்பட்டு […]
எழுவர் விடுதலைக்காக இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என சீமான் வலியுறுத்தல். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் உள்ள பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பேரறிவாளன் விடுதலை தொடர்பான விகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவை அறிவிக்க வேண்டியதிருக்கும் என்றும் குடியரசு தலைவர் முடிவுக்காக காத்திருக்க […]
விருதுநகரில் கோரச்செயலில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி, கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கொடுஞ்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அண்மைக்காலத்தில் பெண்களுக்கெதிராகத் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் பாலியல் வன்முறைகளும், அத்துமீறல்களும் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தானப் பெருங்கவலையைத் தருகின்றன. அத்தங்கைக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் […]