எடப்பாடியில் இ.பி.எஸை எதிர்த்து திமுக சார்பில் சம்பத் போட்டி.!

Announcement that T. Sampath Kumar will contest on behalf of DMK against Chief Minister Palanisamy in Edappadi constituency.

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் த.சம்பத் குமார் போட்டியிடுவதாக அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டுள்ளார். திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீட்டை தமிழகத்தின் பல இடங்களில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த 173 பேர் கொண்ட திமுகவின் வேட்பாளர் பட்டியலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் த.சம்பத் குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமாருக்கு எதிராக திமுக சார்பில் ஐட்ரீம் திரையரங்க உரிமையாளர் இ.ரா மூர்த்தி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.