ஆளுங்கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக ஆர்.எஸ்.பாரதி புகார்!

DMK secretary RS Bharathi has complained to the Election Commission that officials are acting in favor of the ruling party.

ஆளும்கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார்.

அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஆளும்கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் அந்த அதிகாரிகளின் பெயர் பட்டியலும் வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் ஆன்லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் திமுக ஆர்.எஸ்.பாரதி ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதியும், அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.