Z Security: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு. நாடு முழுவதும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அரசியல் கட்சிகள் ஒருபக்கம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பாக சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்கிஸ்ட், பாஜக, தேசிய மக்கள் கட்சி, தேமுதிக ஆகிய கட்சி பிரதிநிதிகள் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். மக்களவை தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு கட்சி பிரதிநிதியுடனும் தனித்னியாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை தலைமை தேர்தல் […]
தலைமை தேர்தல் அதிகாரிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற விவரத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பணி நியமன பிரிவு சட்டம் 1991ஆம் ஆண்டு பிரிவு 4இன் படி பதவிக்காலமானது 6ஆண்டுகள் இருக்க வேண்டும். அல்லது வயது வரம்பு 65 பூர்த்தி அடைந்தால் பதவியில் இருந்து விலக வேண்டும். ஆனால், நெடுங்காலகமாக தலைமை தேர்தல் ஆணையர்களின் பதவி காலமானது மிகவும் குறுகிய காலத்திலேயே […]
ஆளும்கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார். அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஆளும்கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் அந்த அதிகாரிகளின் பெயர் பட்டியலும் வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனிடையே, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் ஆன்லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் திமுக ஆர்.எஸ்.பாரதி ஏற்கனவே […]
சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் சுனில் அரோரா அவர்கள் சென்னை வருகிறார். ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் நடைபெறக்கூடிய தமிழகத்தின் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் சின்ஹா அவர்கள் தலைமையில் உயர்மட்ட குழு அதிகாரிகள் கடந்த டிசம்பர் 22, 23ம் தேதிகளில் சென்னைக்கு வந்து சென்று இருந்தனர். அப்போது மாவட்ட கலெக்டர்கள், மாநில அரசு […]
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது. பீகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டி உள்ளது.ஆனால், கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் கோரிக்கை விடுத்தது. ஆனால், தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிடப்பட்டது. தற்போது பீகாரில் […]
தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பார்வையிட்டு வருகிறார். விக்கரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை காலை முதல் கேமரா மூலமாக சத்யபிரதா சாகு கண்காணித்து வருகிறார்.