ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.17.66 ஆக இருக்கும்போது ரூ.73.28க்கு விற்பனை செய்வது நியாயமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பெட்ரோல்-டீசல் விலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஜனவரி 1ந் தேதி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலையானது61.13டாலர் என்ற நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலைரூ.35.65.இதில் சுத்திகரிப்பு மற்றும் வாகன வாடகை செலவுகளும் இதிலே அடக்கம் ஆகும். அதன் மீது கலால் வரிரூ.19.98, விற்பனையாளர் கமிஷன்ரூ.3.52ஆகிய எல்லாவற்றுடன் தமிழக அரசின்32.11சதவீதம் விற்பனை வரியாகரூ.18.98சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல்ரூ.78.12க்கு விற்பனை செய்யப்பட்டது.
unknown nodeஆனால் இன்றைய சூழலில் கச்சா எண்ணெய் விலை30.20டாலர் தான் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலைரூ.17.66மட்டும் தான். அத்துடன் அதன் மீது கலால் வரிரூ.19.98, விற்பனையாளர் கமிஷன்ரூ.3.52ஆகியவற்றுடன் தமிழக அரசின் 32.11 சதவீதம் விற்பனை வரியாகரூ.13.21சேர்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோல்ரூ.54.37க்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் தற்போதுரூ.18.91கூடுதலாக விற்கப்படுகிறது. அநியாயமாகும். இது கண்டிக்கத்தக்கது.
unknown nodeஅதேபோல, ஒரு லிட்டர் டீசலின் உற்பத்திச் செலவுரூ.19.10மட்டுமே. அதன்னோடு மத்திய கலால் வரிரூ.15.83,விற்பனையாளர் கமிஷன்ரூ.2.47மற்றும் மாநில அரசின்24.04விழுக்காடு விற்பனை வரிரூ.8.99சேர்த்தால் 1 லிட்டர் டீசல்ரூ.46.39க்கு விற்பனை செய்ய வேண்டும்.
unknown nodeஆனால், இதைவிடரூ.21.20கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலைரூ.17.66மட்டுமே ஆனால், இதைவிட 4 மடங்கு அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.இது கண்டிக்கதக்கது இனி வரும் காலங்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.