PMK – BJP: மக்களவை தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடக்கிறது. இதையடுத்து திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளையும் ஒதுக்கி கொடுத்துள்ளது. Read More – தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை! தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி ஆனால் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணியை இன்னும் இறுதி […]
மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுக்க அரசியல் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கில்,இனி எந்தெந்த சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்க முடியாது என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில்,மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுக்க அரசியல் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: […]
தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்காலம் என்ற யோசனையை பா.மா.க.தலைவர் ராமதாஸ் முன்வைத்துள்ளார். தமிழகம்,கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து,அசாமில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, பா.மா.க.தலைவர் ராமதாஸ் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் சில கருத்துகளை முன்வைத்துள்ளார்,”மேற்கு வங்கத்தின் வளர்ச்சியின்மைக்கு முக்கிய காரணம் அது மிகப்பெரிய நிலபரப்பைக் கொண்டுள்ளது.ஆகவே,மேற்கு வங்கத்தை 3 […]
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பாக பாமக நிர்வாகிகளுடன் பேசி அமைச்சர்கள், தற்போது முதல்வருடன் சந்தித்து பேசி வருகின்றனர். தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பா.ம.க சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால், ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் கோரிக்கையை அதிமுக அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் சமீபத்தில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக […]
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.17.66 ஆக இருக்கும்போது ரூ.73.28க்கு விற்பனை செய்வது நியாயமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பெட்ரோல்-டீசல் விலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஜனவரி 1ந் தேதி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலையானது 61.13 டாலர் என்ற நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.35.65. இதில் சுத்திகரிப்பு மற்றும் வாகன வாடகை செலவுகளும் இதிலே அடக்கம் ஆகும். அதன் மீது கலால் வரி […]
தமிழகத்தில் பிற கட்சிகள் ஆட்சி அமைப்பதற்காக நாங்கள் கட்சி தொடங்கவில்லை என்று பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் மேட்டூரை அடுத்த மேச்சேரியில் பாமக கட்சியின் முப்படைகள் சந்திப்பு கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட அன்புமணி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில் கட்சி தொடங்குகின்ற அத்தனைபேரும் அடுத்தது எங்கள் ஆட்சிதான் என்று சொல்லி வருவார்கள். நாங்கள் பாமகவை தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிறது. அ. தி.மு.க , […]
அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து இடங்களிலும் தொடர்ந்து பின்னிலையிலே உள்ளது. பாமகவின் கோட்டையாக கருதப்பட்ட தர்மபுரியிலேயே பின்னடைவைச் சந்தித்ததுள்ளது அக்கட்சி தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. மக்களவை தேர்தளுக்கான பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க கூட்டணியில் […]
அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிமுக உடன் கூட்டணி வைக்குமாறு ராமதாசிடம், பாமக தொண்டர்கள் வலியுறுத்தினார்கள் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. இந்த அதிமுக-பாஜக-பாமக கூட்டணிக்கு ஒரு புறம் ஆதரவு இருந்தாலும் மறுபுறம் எதிர்ப்பும் கிண்டலும் […]
தமிழ்நாட்டில் நடக்கும் மணல் கொள்ளைக்கு அரசு முடிவுகட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமாதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்த அறிக்கையில் , தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் கிராமத்தில் காவிரியாற்றில் குளிக்கச் சென்ற 6 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த செய்தியைக் கேட்டதும் நான் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஏராளமான கனவுகளுடன் வளர்த்த குழந்தைகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் […]
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மாணவர்கள் சங்கம் சார்பாக, கல்வி கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் அருகே மாபெரும் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் பங்கெடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும்போது “புதுக்கோட்டையில் தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.