தென்மாவட்டங்களில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை – கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

KS Alagiri has said that former Congress leader Rahul Gandhi will campaign in the southern districts.

தென் மாவட்டங்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்து காங்கிரஸ் சார்பாக அவ்வப்போது பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில், பிப். 27, 28, மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், காங்கரஸ் ஆட்சியில் ரூ.71-க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், தற்போது ரூ.100 ஆக உயர்ந்துள்ளது என கே.எஸ்.அழகிரி குற்றசாட்டியுள்ளார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பிரதமர் மோடி அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.