மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இந்திராகாந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதே போல காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தின்போது , மகாராஷ்டிராவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.