Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாளைமறுநாள் முதல் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று தேர்தல் பரபரப்புரை செய்தார். அப்போது 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் பிரதமர் மோடி என விமர்சித்து பேசியுள்ளார். […]
Rahul Gandhi: இந்த தேர்தலில் பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு உள்பட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரமும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் வரும் தேர்தலில் பாஜக 150 இடங்களுக்கு […]
Election2024: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தடுக்கும் வகையில் தேர்தல் பிறகும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பேருந்து நிலையில், சாலைகள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரது வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் […]
Election2024: மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 6 நாட்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் பாஜக […]
Prashant Kishor: ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மாநில கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், […]
I.N.D.I.A Alliance : இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தி தான் பிரதமர் என வைகோ அறிவித்துள்ளார். ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அமைக்கப்பட்டு தமிழகத்தில் பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உட்பட தேசிய அளவிலில் பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. NDA கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல, காங்கிரஸ்,, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் […]
Rahul Gandhi : கேரளா வயநாடு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. தமிழகத்தில் 39 தொகுதிகள் புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது போல, அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 28ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் […]
Election2024 : கேரளாவில் ராகுல் காந்தியை எதிர்த்து அம்மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ஆம் தேதிவரையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது . இதில் கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் 2ஆம் கட்ட தேர்தல் தேதியான ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது . இதில், காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தி , […]
Rahul Gandhi : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளது மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தனர். Read More – இந்திய பகுதிகளை உரிமை கொண்டாடும் சீனா.! எதிர்ப்பு காட்டும் அமெரிக்கா இந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி , கே.சி.வேணுகோபால் […]
Bharat Jodo Nyay Yatra : காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்னதாக கான்னியகுமாரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மாநிலங்களில் பெரும் வரவேற்ப்பு கிடைத்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் மீண்டும் தனது நடைப்பயணத்தை கிழக்கில் இருந்து மேற்காக தொடங்கினார். Read More – நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! கடந்த ஜனவரி 14ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் “பாரத ஒற்றுமை நியாய […]
பாரத ஒற்றுமை யாத்திரையின் அடுத்த கட்டமாக, பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கத்தை தொடர்ந்து தற்போது பீகார் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியில் இருந்து ஏன் விலகினேன்.? நிதிஷ்குமார் விளக்கம் இன்று பீகார் மற்றும் மேற்கு வங்க எல்லை பகுதியில் ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரையினை தொடங்கிய போது சில மர்ம நபர்கள் ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தினர். கற்களை கொண்டு வீசியதாகவும் […]
ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணிக்கு எதிராகவும் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி , திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியினை முதலில் ஒன்றிணைத்து முதல் ஆலோசனை கூட்டமே பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அதே போல அடுத்தடுத்த இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திலும் […]
பாரத ஒற்றுமை யாத்திரையை தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தற்போது பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை (Bharat Jodo Nyay Yatra) மணிப்பூரில் இருந்து கிழக்கு முதல் மேற்காக தொடங்கியுள்ளார் . இந்த ஒற்றுமை நியாய யாத்திரை கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கபட்டது. அசாம் மாநிலத்தில் கோலகஞ்சி, துப்ரி ஆகிய மாவட்டங்களை கடந்து தற்போது மேற்கு வங்கத்தில் யாத்திரை தொடங்கியுள்ளது. இன்னும் 25 வழக்குகள் கூட போடுங்கள்… நான் பயப்பட மாட்டேன்.! – ராகுல்காந்தி. இன்று […]
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை சென்றதை அடுத்து தற்போது கிழக்கில் இருந்து மேற்காக தனது அடுத்தகட்ட நடை பயணத்தை தொடங்கியுள்ளார். மணிப்பூரில் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை தற்போது அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று அசாம் தலைநகர் கவுகாத்தி நகருக்குள் செல்ல முயன்ற ராகுல் காந்திக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள் சிங்கங்கள். […]
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்களின் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய தேசிய ராணுவத்தை துவங்கி இந்தியாவில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து விடுதலை வீரர்களை ஒருங்கிணைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரது 127வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பலவேறு அரசியல் பிரபலங்கள் மரியாதை செலுத்தியும், சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். தற்போது பாரத ஒற்றுமை நியாய யாத்திரையில் […]
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ராகுல் காந்தி தனது நீதியாத்திரையை தொடங்க மாநில அரசு அனுமதி அளிக்கப்பத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மூலம் தனது பிரச்சாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். அதேபோல, தற்போது கிழக்கில் இருந்து மேற்கு பகுதி மாநிலங்களை உள்ளடக்கிய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். வரும் ஜனவரி 14-ஆம் […]
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மூலம் தனது பிரச்சாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். அதேபோல, தற்போது கிழக்கில் இருந்து மேற்கு பகுதி மாநிலங்களை உள்ளடக்கிய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி! வரும் ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் இருந்து இந்த ஒற்றுமை யாத்திரையை […]
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மீண்டும் தொடங்கவுள்ள இந்திய ஒற்றுணை நடைபயணத்தின் லோகோ, அதன் டேக்லைன் மற்றும் குறிக்கோளை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் அக்கட்சியின் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொண்டார். ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரை பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், இரண்டாவது கட்ட பாத யாத்திரையை நாட்டின் […]
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை […]
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ‘பாரத் நியாய யாத்ரா’ பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தேதி வரை “பாரத் ஜோடோ யாத்ரா” மேற்கொண்ட ராகுல், தற்போது இந்த புதிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நீதியை வழங்குவதற்காக “பாரத் நியாய யாத்ரா” நடத்தப்படுகிறது. கன்னியாகுமரியில் துவங்கிய “பாரத் ஜோடோ யாத்திரை” காஷ்மீரில் நிறைவடைந்தது. இந்தப் பயணத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ராகுல் […]