#Breaking : தடை மீறி போராட்டம்... ராகுல் காந்தி கைது..

தடை மீறி போராட்டம் நடத்தியதாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தடை மீறி போராட்டம் நடத்தியதாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விலைவாசி உயர்வு,  மற்றும் பணவீக்கம் அதிகரிப்புக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வந்தனர்.

டெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் , தடை மீறி போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்டு அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் ஆகியோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மாலை அவர்கள் விடுவிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால், நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் 144 தடை போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

#Breaking : தடை மீறி போராட்டம்... ராகுல் காந்தி கைது..