கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி படுதோல்வி – முக ஸ்டாலின்

MK Stalin stressed that the central and state governments must act responsibly to protect the people from the corona disaster.

கொரோனா பேரிடரிலிருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸை தடுப்பதில் பிரதமர் மோடி இப்படி படுதோல்வி அடைந்திருப்பது ஏன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தடுப்பூசி விரயமாவதை தடுத்தல், ரெம்டெசிவர் மற்றும் ஆக்சிஜனை தட்டுபாடு இன்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா ஏற்பட்டவுடன் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது பேரதிர்ச்சி என குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசுக்கே தெரியாமல் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு ட்ரான்ஸ்பர் செய்திருப்பது வேதனை அளிக்கிறது.

தமிழகத்தில் 12.10% தடுப்பூசி வீணாக்கப்பட்டுள்ளது என்பது ரத்த கண்ணீர் வர வைக்கிறது. கொரோனா பேரிடரிலிருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி படுதோல்வி – முக ஸ்டாலின்