திமுக அரசால் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்பட்டுள்ளது.! – ஓபிஎஸ் காட்டமான அறிக்கை.!

கோவை கார்விபத்து குறித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும், திமுக அரசை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவை கார்விபத்து குறித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும், திமுக அரசை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ சோதனை செய்யும் அளவுக்கு பூதாகரமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்தும், தமிழக சட்ட ஒழுங்கு பற்றியும், ஓ.பன்னீர்செல்வம் தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திமுகவால் சீர்குலைக்கபட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்த வேண்டும். பயங்கரவாதிகளிடமிருந்து தமிழகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தினமும் 8 முதல் 10 கொலைகள் வரையில் நடந்து வருகிறது.என ஓ.பன்னீர்செல்வம், திமுக அரசை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் .