Election2024 : கரும்பு விவசாயி சின்னம் எப்படி சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக அதே பன்னீர்செல்வம் எனும் பெயர் கொண்ட 5 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதில் அனைவரது வேட்புமனுவும் ஏற்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் அண்மையில் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவருக்கு கரும்பு […]
Election2024: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாளி சின்னம் ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு பணி நடைபெற்று வருகிறது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி, சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, முதலில் பதிவு […]
OPS: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 6-வதாக மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இதில், குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் ராமநாதபுர தொகுதியில் சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்துள்ளது. அதாவது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை நேற்றுமுன்தினம் தாக்கல் […]
OPS : ராமநாதபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பின்போது ஒரு நபருக்கு சுயேச்சை வேட்பாளர் ஓபிஎஸ் 500 ரூபாய் பணம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி ஆதரவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். முன்னதாக இரட்டை இலை சின்னம் கேட்டு, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு வந்த ஓபிஎஸ், நேற்று தனக்கு வாளி சின்னம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்து […]
ADMK : அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பிரிந்தனர். இதில் இபிஎஸ் பக்கம் அதிக ஆதரவு இருந்த காரணத்தால் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என அனைத்தும் தற்போது வரையில் இபிஎஸ்க்கு ஆதரவாகவே உத்தரவு வழங்கியுள்ளனர். மேலும், நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக சின்னம், கொடி பயன்படுத்தவும் […]
Election2024 : ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மற்றொரு நபர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி தமிழகத்தில் நிலவுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து சுயேட்சையாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று […]
OPS: இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மாற்றம் லெட்டர் பேடு ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்திருந்தார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், தனி நீதிபதி விதித்த தடையை விலக்க வேண்டும் என்றும் இரட்டை இலை சின்னம், அதிமுக கொடியை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் […]
OPS : இன்று பிரதமர் நரேந்திர மோடி சேலத்தில் நடைபெறும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த வருடத்தில் 6வது முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று கோவையில் ரோட் ஷோ நிகழ்வில் கலந்து கொண்டு இன்று சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். Read More – தெரிந்து கொண்டு பேசுங்கள்.. காங்கிரஸ் மூத்த தலைவரை வம்பிழுக்கும் அண்ணமாலை.! பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் […]
OPS – முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய தடையில்லை என உச்சநீதிமன்றம் உதவியுள்ளது. கடந்த 2001 – 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அப்போது அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன், மகள் , உறவினர் என ஓபிஎஸ் தொடர்புடையவர்கள் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. Read More – […]
இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்ற நிலையில், 10 விழுக்காட்டிற்கும் குறைவான காலிப் பணியிடங்களுக்கு ‘டிஎன்பிஎஸ்சி’ அறிவிப்பு வெளியிட்டு இருப்பது யானை பசிக்கு சோளப் பொறி போடுவது போல் அமைந்துள்ளது என 6,244 இடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு குறித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் இருந்தால்தான் மக்களின் திட்டங்கள் விரைவில் மக்களை சென்றடையும். ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலான திமுக ஆட்சியில் […]
உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு நாளை ஜன. 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக ராமர் பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உத்தரப்பிரதேசம், குஜராத், புதுச்சேரி என 16 க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களுக்கும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்கும் வகையில், நாளை […]
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து நீதிமன்றங்களை நாடி வந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்! இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் […]
சென்னையில் கடந்த 2022 -ம் ஆண்டு ஜூலை மாதம் 11 -ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கொண்டு வருவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் […]
இன்று ஜனவரி 17ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வரும் , அதிமுக தலைவருமான எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் , ஓபிஎஸ் ஆதரவாளர்கள், டிடிவி.தினகரன், சசிகலா தரப்பினர் என பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் போது ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், நானும் இணைந்து செயல்பட உள்ளோம் – டிடிவி தினகரன் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அதிமுக கொடி […]
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவு தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதன்பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. பதவி கொடுத்த சசிகலாவுக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் தான் அவர். சசிகலாவை தரக்குறைவாக பேசி இபிஎஸ் நம்பிக்கை […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு, சினிமா , அரசியல் பிரபலங்கள் , தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். […]
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர்,செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக சிறப்பாக பணியாற்றியவர், அனைத்து மக்களிடம் அன்பாக பழகி பழகக் கூடியவர், ஏழை எளிய மக்கள் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் […]
நேற்று கோவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், நான் சில விஷயங்களை வெளிபடையாக கூறினால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறை சென்று விடுவார். கட்சிக்கு நான் உண்மையானாக இருந்ததன் காரணமாகவே ஜெயலலிதா […]
இன்று கோவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கட்சி விவகாரங்கள் குறித்து பல்வேறு விவகாரங்களை கூறினார். அவர் பேசுகையில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் என்னை மிகவும் நம்பினர். அவர்கள் நம்பியதால் தான் சாதாரண தொண்டனாக இருந்து, நகர மன்ற தலைவராக மாறி, பின்னர் சட்டமன்ற தலைவராகவும், அமைச்சராகவும் முதல்வராகவும் நான் பொறுப்பில் இருந்தேன். […]