மனித உயிரை விட வேறு எதுவும் முக்கியமில்லை – நடிகை குஷ்பு ட்வீட்!

Actress Khushboo tweeted that whoever is responsible for the violence in Uttar Pradesh should take stern action.

உத்தர பிரதேசத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் நடிகை குஷ்பு ட்வீட்.

உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட காரணத்தால் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி 8 பேரை கொன்றது கடுமையான குற்றம்.

எந்த விதத்திலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை வேண்டும். மனித உயிரை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்றும் மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம் எனவும் தெரிவித்துள்ளார்.

unknown node