டெல்லி : பயிர்களுக்கு ஆதார விலை (MSP) கோரிக்கையை முன்னிறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் 101 பேர் அடங்கிய குழுவினர் இன்று தலைநகர் டெல்லி நோக்கி பேரணியாக புறப்படுவதாக முன்னர் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று அவர்கள் ஹரியானா – டெல்லி மாநில எல்லையான ஷம்பு பகுதிக்கு வந்தனர். அவர்களை டெல்லி நோக்கி செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் முன்னேறுவதை தடுக்க தடுப்புகள் அமைத்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தடுத்தி நிறுத்தி வருகின்றனர். […]
Farmers protest : மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் கடந்த 13ம் தேதி டெல்லியை நோக்கி சலோ டெல்லி என்ற பேரணியை தொடங்கினர். Read More – மீண்டும் வரலாறு படைப்போம்! திமுக ஆட்சியமைத்த நாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் […]
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளார். அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் சட்டம், பயிர் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், பயிர் கடனை தள்ளுபடி என 12 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் பேரணி போராட்டத்தை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், விவசாய அமைப்பினர் மற்றும் […]
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் பயிர்களுக்கான விலை நிர்ணயம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் இழப்பீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ‘டெல்லி சலோ’ என்று தலைநகரை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க டிராக்டர் மூலம் பேரணியாக டெல்லியை நோக்கி படையெடுத்து வரும் விவசாயிகள் பஞ்சாப்-ஹரியானாவின் ஷம்பு எல்லையில் குவிந்து வருகின்றனர். இதனால் […]
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கமான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் இன்று தொடங்குகிறது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் சட்டம், கொள்முதலுக்கான உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் மற்றும் மின்சார திருத்த சட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உள்ளிட்ட பல மாநில விவசயிகள் தேசிய தலைநகர் டெல்லியை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் […]
குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடத்துவோம் என சமீபத்தில் விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் விவசாய சங்க தலைவர் உடன் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல் மற்றும் அர்ஜூன் முண்டா பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவும் எட்டப்படவில்லை, இதனால் திட்டமிட்டபடி டெல்லி போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்தனர். நேற்று முதல் பஞ்சாப், ஹரியானா, உத்தர […]
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200 விவசாய சங்கத்தினர் டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இந்த போராட்டத்துக்கு முன்பாகவே விவசாய சங்கத்தினருடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி நேற்று டெல்லியை நோக்கி ‘சலோ டெல்லி’ பேரணியை விவசாயிகள் தொடங்கினர். கடந்த 2020ல் நடைபெற்ற மிகப்பெரிய தொடர் போராட்டம் போன்று இம்முறை மாறிவிட கூடாது என்பதால் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க முன்பு இல்லாத […]
விவசாயிகள் இன்று டெல்லிக்கு பேரணி மேற்கொள்வதையொட்டி, பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விசாயிகளில் டெல்லிக்கு பேரணியாக வர தொடங்கியுள்ளனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், டெல்லியை முற்றுகையிட்டு ‘சலோ டெல்லி’ பேரணியை தொடங்கியுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு […]
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் இன்று டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால், தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், 144 உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மத்திய அமைச்சர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விவசாயிகள் அறிவித்தப்படி, இன்று காலை முதல் டெல்லியை […]
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் இன்று டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு தொடர் போராட்டத்தை நடத்தினர். அப்போது மத்திய […]
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். அப்போது நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடினர். வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்ட பிறகு அந்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டன. தற்போது அதே போல் மீண்டும் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர். இதெல்லாம் போலி நம்பாதீர்கள்.. CBSE வெளியிட்ட விழிப்புணர்வு தகவல்.! விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் […]
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்களில் அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் முடிவு வந்தது. இந்த நிலையில், அதுபோன்று மற்றொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் […]
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் நாளை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதாவது, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி, மத்திய அரசை கண்டித்து டெல்லியில் முற்றுகையிடும் போராட்டத்துக்காக சுமார் 20,000 விவசாயிகள் திரள திட்டமிட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், […]
உத்தர பிரதேசத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் நடிகை குஷ்பு ட்வீட். உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட காரணத்தால் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகையும், […]
போராடிய உழவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 300 நாட்களாக உழவர்கள் போராடி வருகிறார்கள். அதனை மத்திய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உ.பி மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் ஆகும். மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். […]
1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்க வேண்டும் என மத்திய அரசின் புகாருக்கு ட்விட்டர் நிர்வாகம், “ட்விட்டர் விதிகளை மீறினால் நிச்சியம் அவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படும்” என்று பதிலளித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், 80-க்கும் மேற்பட்ட நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் வேளாண் சட்டங்களை ரத்து செய்த நிலையில், அதனை […]
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களுக்கு மத்தியில், வடக்கு ரயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல் நேற்று கூறுகையில், தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தால் இந்திய ரயில்வேக்கு சுமார் ரூ.2,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, பியாஸ் மற்றும் அமிர்தசரஸ் இடையே ரயில்வேயின் ஒரு பகுதி தடுக்கப்பட்டுள்ளது. டார்ன் தரன் மாவட்டம் வழியாக செல்லும் மாற்று வழியை நாங்கள் பயன்படுத்துகிறோம். ஆனால், இது ஒரு நீண்ட தூரம் இருப்பதால் தேவையான அளவு ரயில்களை இயக்க […]
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் வியாழக்கிழமை ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்தித்து மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய விவசாய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தினர் . இந்த சந்திப்புக்கு பின்னர் ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்த விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று நான் ஜனாதிபதியிடம் கூறினேன். இச்சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை இந்த விவசாயிகள் […]
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பசி தீர்க்கும் வண்ணம், ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரம் சப்பாத்திகள் தயார் செய்து தரும் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு முடிவில்லாமல் நடைபெற்று வருகிற நிலையில், பல கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி எல்லைப்பகுதி போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்நிலையில், டெல்லி புராரி மைதானத்தில் […]
மத்திய அரசின் புதிய வேளாண் திட்டத்தை கண்டித்து தமிழகத்தில் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டம். மத்திய அரசு புதிய 3 சட்டங்கள் கொன்ட வேளாண் திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்யக்கூடிய நிலத்தில் விளைவிக்கக்கூடிய பயிர்களின் விலை நிர்ணயத்தை பயிரிடுவதற்கு முன்பாகவே நிர்ணயித்து பண ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும், இதன் மூலம் விலை வீழ்ச்சியை தடுக்கலாம் எனவும் மத்திய அரசால் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய […]