கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என ராகுல் காந்தி ட்விட்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நேற்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதற்கிடையில், சென்னையில் நேற்று காலை முதல் நகரின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதன்காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியது.
சென்னையை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு மக்களை சுற்றியே எனது எண்ணங்கள் உள்ளது. கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node