மம்தா பானர்ஜி டெல்லியில் நாளை கட்சி எம்.பிக்களை சந்திக்க உள்ளார்...!

Mamata Banerjee, who is on a five-day visit to Delhi, will meet party MPs.

5 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள மம்தா பானர்ஜி கட்சி எம்.பிக்களை சந்தித்து பேசவுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா மற்றும் கமல்நாத் ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார்.

மேலும், இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி அவர்களையும் சந்தித்து பேசியிருந்தார். இதனையடுத்து டெல்லியில் உள்ள கட்சி எம்பிக்களை சந்தித்து நாளை பேச உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நாளை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளார் என கூறப்படுகிறது.