மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநில ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. மம்தா பேனர்ஜி முதல்வராக உள்ளார். இவரது அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். இவர் முன்னதாக உணவுத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தபோது கொரோனா காலத்தில், அரசின் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் பல கோடி ரூபாய் அளவில் ஊழல் முறைகேடு நடந்ததாக இவர் மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. பிரதமர் மோடியின் ரூ.21 கோயில் காணிக்கை.., காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியது […]
தாயின் இறுதி சடங்கை முடித்தபின் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு. மேற்கு வங்கம் மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக குஜராத்தில் இருந்து பங்கேற்றுள்ளார். தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. இன்று தாயாரின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட நிலையில், தற்போது காணொளியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, […]
மேற்கு வங்க மாநில அமைச்சராக இருந்த சுப்ரதா சாஹா மாரடைப்பால் காலமானார். மேற்கு வங்க மாநில அமைச்சர் சுப்ரதா சாஹா (வயது 72) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். கடுமையான நெஞ்சுவலி காரணமாக இன்று காலை முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாகர்திகி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுப்ரதா சாஹா, 2011, […]
மேற்கு வங்கத்தின் முதலாவது வந்தே பாரத் ரயிலை, பிரதமர் மோடி டிசம்பர் 30ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேற்கு வங்கத்தின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாக, ஹவுரா- நியூ ஜல்பைகுரி வழித்தடத்தில் வரும் டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு வழித்தடங்களிலும் பயண நேரம் 7.5 மணிநேரம் எனவும், வாரத்தின் ஆறு நாட்களில் இயங்கும் எனவும் கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஏகலப்ய […]
பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜியை ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு. மேற்கு வாங்க மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பான சோதனையில், அர்பிதா முகர்ஜி வீட்டில் மொத்த 50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஆசிரியர் பணி […]
மேற்கு வங்கத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் பதவியேற்பு. மேற்கு வங்க மாநிலத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் தெரிவித்திருந்தார். புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், சுப்ரதா முகர்ஜி, பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்ட அமைச்சர்கள் இல்லாத நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்கிறது எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை மாற்றி […]
மேற்கு வங்கத்தில் 7 புதிய மாவட்டங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் தகவல். மேற்கு வங்க மாநிலத்தில் புதன்கிழமை அன்று அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். சுப்ரதா முகர்ஜி, பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்ட அமைச்சர்கள் இல்லாத நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. மேலும், மேற்கு வங்கத்தில் 7 புதிய மாவட்டங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் […]
அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து 4 கார்கள் மாயமானது அடுத்து அமலாக்கத்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து 4 கார்கள் மாயமாகியுள்ளதாக அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெர்சிடிஸ், ஆடி மற்றும் இரண்டு ஹோண்டா சிட்டி ஆகிய கார்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் அடித்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆடி ஒன்று கைப்பற்றப்பட்டது. மற்ற வாகனங்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, […]
மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு. ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் சிக்கிய மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியிடம் இருந்து 51 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அமைச்சர் பதவியில் […]
அர்பிதா முகர்ஜியின் குடியிருப்பில் ரூ.28 கோடி ரொக்கம், 6 கிலோ தங்கம் பறிமுதல். மேற்கு வங்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கடந்த 23ம் தேதி கைது செய்திருந்தது. பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் சோதனையில் ஈடுபட்டது. இந்த ஊழல் நடந்தபோது மாநில கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி, சுமார் 26 மணி […]
ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பாக மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை கைது செய்தது அமலாக்கத்துறை. மேற்கு வங்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும், ஊழல் தொடர்பான வழக்கில் 26 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு அமலாக்க இயக்குனரகம் (ED) கைது செய்தது. அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின், நெருங்கிய கூட்டாளி அர்பிதா முகர்ஜி வீட்டில் […]
மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தடுப்புப் பிரிவுகளின் கீழ் கைது. மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தடுப்புப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த ஹவுரா பகுதிக்கு செல்ல முற்பட்டதால் மேற்குவங்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது, ஹவுராவில் வன்முறை காரணமாக அங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், இந்த நேரத்தில் மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் அங்கு சென்றபோது, […]
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் கடிதம். குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், குடியரசு தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து உள்ள அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வரும் 15-ஆம் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தலுக்குப் பின்பதாக தற்பொழுது முதன்முறையாக மேற்கு வங்க மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அமித்ஷாவின் இந்த வங்கத்து பயணம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்து பாஜக அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிப்பதற்காவும், மாநில பாஜக கட்சியில் உள்ள உட்கட்சி பூசல்கள் குறித்து அறிந்து கொள்வதற்காகவும் தான் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 5 ஆம் தேதி ஆம் தேதி இரவு […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அண்மையில் பேசிய போது, இலங்கையில் பொருளாதார நிலை மோசமாக தான் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதார நிலை இலங்கையை விட மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதில் பேசியுள்ள மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் அவர்கள், இலங்கையின் நிலையை விட மேற்குவங்கத்தின் நிலை மிக மோசமாக உள்ளது, அதை கவனித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு வங்கம் தனி நாடாக இருந்திருந்தால், […]
நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிகளவில் பிச்சைக்காரர்கள் இருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து ராஜ்ய சபையில் பேசிய ஒன்றிய அமைச்சர் நாராயணசாமி அவர்கள், நாடு முழுவதும் 4.3 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிலேயே அதிக அளவில் மேற்கு வங்க மாநிலத்தில் தான் பிச்சைக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும், இதனை தொடர்ந்து உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலத்தில் அதிக பிச்சைக்காரர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க பிர்புமில் 8 பேர் எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக 21 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு. தீ வைத்து எரித்த சம்பவம்: கடந்த திங்கள்கிழமை மேற்குவங்க மாநிலத்தில் பிர்பூம் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டதால் 8 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர். பஞ்சாயத்து துணை தலைவர் கொலைக்கு பழிவாங்க 10 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
மேற்குவங்கம் மாநிலத்தில் பிர்பும் வன்முறை வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு. மேற்குவங்க வன்முறை – சிபிஐக்கு மாற்றம்: மேற்குவங்கத்தில் 8 பேர் தீ வைத்து எரித்துக் கொள்ளப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிர்பும் பகுதியில் நடந்த வன்முறை குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீ வைத்து எரித்த சம்பவம்: கடந்த திங்கள்கிழமை மேற்குவங்க மாநிலத்தில் […]
மேற்கு வங்கத்தில் உள்ள 108 மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. மேற்கு வங்கத்தில் உள்ள 108 மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 108 மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி […]
கொரோனா பரவல் அதிகப்பு காரணமாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் கல்வி நிறுவனங்களை மூட அம்மாநில அரசு உத்தரவு. மேற்குவங்கத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பல்கலைகழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படவும் ஆணையிட்டுள்ளது. உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் ஜிம்கள் & ஸ்பாக்கள் நாளை […]