திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு புது விளக்கம் அளித்த மம்தா பானர்ஜி!

Mamata Banerjee has given a new interpretation to the Trinamool Congress, pointing out all three religions.

திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு மும்மதங்களையும் சுட்டி காண்பித்த்து மம்தா பானர்ஜி புது விளக்கம் அளித்துள்ளார்.

அடுத்த ஆண்டு கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிரமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி அவர்களும் கோவாவில் முகாமிட்டு கட்சித் தொண்டர்களிடம் பேசி வருகிறார்.

அப்போது பேசிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதாவது டிஎம்சி என்றால் டெம்பிள், மசூதி மற்றும் சர்ச் என ஆங்கிலத்தில் கூறியுள்ளார். மேலும் கட்சித் தொண்டர்களிடம் நம்பிக்கை இருந்தால் நீங்கள் பின் வாங்காதீர்கள்; பாஜகவுக்கு எதிராக நாம் போராடுகிறோம். நமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதா? நாம் வெல்வோம் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.