Mamata Banerjee : நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் ஓர் அதிர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டது.அதில் மேற்கு வங்க மாநில முதல்வரும், திரினாமுக் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி, தலையில் காயத்துடன், முகத்தில் வழிந்தோடும் ரத்தத்தோடு இருக்கும் புகைப்படம் வெளியானது. Read More – மம்தா பானர்ஜி படுகாயம்..! நெற்றியில் கடுமையான ரத்த காயங்களுடன் வெளியான புகைப்படங்களால் அதிர்ச்சி அதில் மம்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று மட்டுமே […]
கடந்த மாதம் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார். நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்புவதற்கு தொழிலதிபர் ஒருவரிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாஜக எம்.பி. வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, அறிக்கை வெளியிட்டது. அதில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்ற மக்களவை தலைவர் […]
மேற்கு வங்க மாநிலத்தில் பொது விநியோக திட்ட முறைகேடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பொது விநியோக திட்ட முறைகேடு தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில், 17 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைத்த போதிலும், தனது கணவர் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி ஜோத்ஸ்னா ஆதியா […]
மேற்கு வாங்க ஆளுங்கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் வீட்டில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் மரணம் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க மாநில ஆளுங்கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புர்பா மேதினிபூர் பகுதி பூத் தலைவர் ராஜ்குமார் மன்னாவின் வீட்டில் நேற்று இரவு குண்டுவெடிப்பு நடந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து இதுவரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இறந்தவாரேல் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ், பிஜேபி எம்எல்ஏக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரி உட்பட 5 பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பெரும் அமளி ஏற்பட்டது. பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. பிர்பூம் வன்முறை விவகாரம் தொடர்பாக குறித்து விவாதிக்கக் கோரியபோது, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைதி இழந்து கைகலப்பில் ஈடுபட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. […]
திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு மும்மதங்களையும் சுட்டி காண்பித்த்து மம்தா பானர்ஜி புது விளக்கம் அளித்துள்ளார். அடுத்த ஆண்டு கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிரமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி அவர்களும் கோவாவில் முகாமிட்டு கட்சித் தொண்டர்களிடம் பேசி வருகிறார். அப்போது பேசிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். […]
கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்தார். கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 40 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் வாக்குறுதியில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ .5000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று திரிணாமுல் எம்.பி […]
2022 சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (எம்ஜிபி) திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தலைவர் தீபக் தவாலிகர் தெரிவித்தார். கோவாவில் பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (எம்ஜிபி) மாநிலத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுடன் (டிஎம்சி) கூட்டணியில் போட்டியிடப் போவதாக அறிவித்தது. இன்று நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அக்கட்சி தலைவர் தீபக் தவாலிகர் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய […]
மேகாலயாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தற்பொழுது தேசிய மக்கள் கட்சி கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கான்ரட் கொங்கல் சங்மா என்பவர் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார். மேகாலயா மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவது காங்கிரஸ் கட்சி தான். இந்த கட்சியில் மொத்தம் 17 எம்எல்ஏ -க்கள் உள்ளனர். இந்நிலையில், 12 எம்.எல்.ஏக்கள் திடீரென நேற்று ஒரே நாளில் திரிணாமுல் […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா முன்னிலையில் காங்கிரஸ் தலைவர்கள் கீர்த்தி ஆசாத், அசோக் தன்வார் ஆகியோர் திரிணாமூல் காங்கிரசில் இணைந்துள்ளனர். ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ராகுல் காந்தி அவர்களின் நெருங்கிய நண்பருமான அசோக் தன்வர் மற்றும் கீர்த்தி ஆசாத் ஆகிய இரு காங்கிரஸ் தலைவர்களும் இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். டெல்லியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமாகிய மம்தா பானர்ஜி அவர்கள் முன்னிலையில் இருவரும் திரிணாமுல் காங்கிரஸ் […]
கோவா முன்னாள் முதல்வருமான லூயிசின்ஹோ ஃபலேரோ மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோவாவின் முன்னாள் முதல்வர், 7 முறை எம்.எல்.ஏ மற்றும் கோவாவின் பெரிய அரசியல் முகமான லூய்சின்ஹோ பலேரோ இந்த ஆண்டு செப்டம்பரில் காங்கிரஸில் இருந்து விலகி, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதற்குப் பிறகு, பாஜக மற்றும் அதன் பிளவுபடுத்தும் கொள்கைகளை தோற்கடிப்பேன் என்று கூறி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். திரிணாமுல் காங்கிரஸ் அவரை கட்சியின் தேசிய துணைத் தலைவராக்கியது. […]
கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சயோனி கோஷுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மேற்கு வங்க தலைவர் சயனி கோஷ் அவர்கள் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார். அப்போது முதல்வர் பிப்லப் தேவை கடுமையாக சாடி மிரட்டும் […]
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரதா முகர்ஜி நெஞ்சு வலி காரணமாக நேற்றிரவு காலமானார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,மேற்கு வங்க அரசின் கேபினட் அமைச்சராகவும், மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய சுப்ரதா முகர்ஜிக்கு வயது 75.அவருக்கு அக்டோபர் 24 அன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்தும்,நெஞ்சுவலி காரணமாகவும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில் ,சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9.22 மணியளவில் அவர் காலமானார். […]
திரிபுரா எம்எஎல்ஏ ஆஷிஸ் தாஸ் மொட்டையடித்து பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பாஜகவில் நீண்ட காலமாக பணிபுரிந்து வந்தவர் தான் ஆசிஸ் தாஸ். திரிபுராவின் சுர்மா தொகுதி எம்எல்ஏவான ஆசிஸ் தற்பொழுது பாஜகவிலிருந்து விலகி உள்ளார். மேலும் இதற்காக தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டு, இவர் பாஜகவிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆசிஸ் திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு அரசியல் […]
கோவா முன்னாள் முதல் மந்திரி லுயிசினோ பெலேரோ திரிணாமூல் காங்கிரஸில் இன்று இணைந்துள்ளார். கோவா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமாகிய லூயிசினோ பெலேரோ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், இவர் தற்பொழுது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, மேற்குவங்க மாநில மந்திரிகள், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து கொல்கத்தாவில் வைத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இன்று மட்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜகவின் தேசிய துணை தலைவரான முகுல் ராய் மற்றும் அவரது மகன் சுப்ரான்ஷூ ஆகிய இருவரும்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில்,மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும்,கட்சியின் மூத்த தலைவரான முகுல் ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதை அடுத்து,கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கு வங்க எம்.பி.பதவியை முகுல் ராய் ராஜினாமா செய்தார். இதனையடுத்து,பாஜகவில் இணைந்த முகுல் ராய்,அக்கட்சியின் தேசிய துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,கடந்த […]
புயல் நிவாரணப் பொருட்கள் திருட்டு. மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு. மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்,நந்திகிராமம் தொகுதியில்,பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி,திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும்,மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையில்,கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் தாக்கியது.இதில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.இதனால், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும்,புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கு வங்க […]
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஜாமீன் ரத்து எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. நாரதா வழக்கில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் பிர்காத் ஹக்கிம், சுப்ராதா முகர்ஜி, மதன் மித்ரா சோவன் சட்டர்ஜி ஆகிய 4 பேரை நாரதா வழக்கில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் நேற்று முன்தினம் சிபிஐ விசாரணைக்கு அழைத்து 4 பேரையும் கைது செய்தனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்ததாக தகவல் வெளி வந்தவுடன் […]
அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாஜக எம்.பி. சௌமிட்ரா கானின் மனைவி சுஜாதா மண்டல் கான் இன்று திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார். நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் சுவேந்து ஆதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் விட்டு பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் முன்னிலையில் சுஜாதா மண்டல் கான் கட்சியில் இணைந்தார். திரிணாமுல் காங்கிரஸில் […]
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிஸில் மிக முக்கிய தலைவராக இருந்த சுவேந்து ஆதிகரி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். சமீபத்தில் சுவேந்து ஆதிகரி எங்களுடன் சேர விரும்பினால் அவர் கட்சியில் வரவேற்கப்படுவார் என்று பாஜக மாநில பிரிவு தலைவர் திலீப் கோஷ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.