Electoral Bonds : பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்கள் கட்சிக்காக நிதி பெரும் திட்டத்தை ஆளும் பாஜக அரசு கொண்டு வந்தது. அதன்படி ஏப்ரல் 2019 முதல் பிப்ரவரி மாதம் 2024 வரையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்வேறு கட்சிகள் நிதி பெற்று வந்தன. இந்த தேர்தல் பத்திர நடைமுறையை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தடை செய்தது. மேலும், பாரத ஸ்டேட் வங்கி மூலம் மட்டுமே பெறக்கூடிய இந்த தேர்தல் பத்திர விவரங்களை […]
மேற்கு வங்க மாநிலத்தில் பொது விநியோக திட்ட முறைகேடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பொது விநியோக திட்ட முறைகேடு தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில், 17 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைத்த போதிலும், தனது கணவர் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி ஜோத்ஸ்னா ஆதியா […]
நாடாளுமன்ற மக்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மகுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், நெறிமுறைக் குழுவின் பரிந்துரையின் பேரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டது. திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா மக்களவையில் தொழிலாலதிபர் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் லஞ்சம் வாங்கியதாக, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே […]
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தெலுங்கானாவில் 10 ஆண்டுகால சந்திரசேகர ராவ் ஆட்சியை அகற்றி காங்கிரஸ் முதன் முதலாக ஆட்சியை கைப்பற்றியது மட்டுமே அக்கட்சிக்கு ஒரு ஆறுதல் வெற்றியாக மாறியுளளது. மற்றபடி , ஏற்கனவே ஆட்சி செய்த சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜகவிடம் ஆட்சியை இழந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜகவிடம் தோல்வி கண்டுள்ளது. மிசோராமிலும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் வட இந்தியாவில் […]
இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முதல் நாள் கூட்டம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று முதல் அடுத்த 15 வேலை நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரையில்) நடைபெற்று, வரும் டிசம்பர் 22ஆம் தேதி வரையில் கூட்டத்தொடர் நடைபெறும். இந்த கூட்டத்தொடரில், பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. கூட்டத்தொடருக்கு முன்னர் பேசிய பிரதமர் மோடி, ‘ எதிர்க்கட்சிகளுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய இது ஒரு பொன்னான வாய்ப்பு’ என கூறினார். நேற்றைய முடிவுகளின் மூலம் […]
மேற்குவங்கத்தில் பாஜக நடத்திய கூட்டத்திற்கு சென்றவர்களில் 3 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு. மேற்குவங்க மாநிலத்தில் பர்த்வான் மாவட்டத்தில் பாஜக சார்பில் ஏழை மக்களுக்கு போர்வைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்ட நிலையில், கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பாஜக முறையாக இந்த கூட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் […]
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட் மூலம் காயம் அடைந்துள்ளார். ஆனால் மோர்பி பாலம் இடிந்த சம்பவத்தில் 135 பேர் இறந்ததால் அவருக்கு வருத்தமில்லை. – திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே. மேற்கு வங்க ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே, சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் கீழ் கைது 2 முறை கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை […]
மேற்கு வாங்க ஆளுங்கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் வீட்டில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் மரணம் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க மாநில ஆளுங்கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புர்பா மேதினிபூர் பகுதி பூத் தலைவர் ராஜ்குமார் மன்னாவின் வீட்டில் நேற்று இரவு குண்டுவெடிப்பு நடந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து இதுவரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இறந்தவாரேல் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஓரணியில் திரண்டால் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டிவிடலாம். மேற்கு வங்கத்தில் விரைவில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தை தற்போது ஆரம்பித்துள்ளார் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி கொல்கத்தாவில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசினார். அப்போது, ‘மேற்கு வங்க […]
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மேற்குவங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா தனது விலையுயர்ந்த கைப்பையை அருகில் வைத்த வீடியோ வெகு வைரலாக பரவி வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த வரம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு குறித்து வாதங்கள் வைக்கப்பட்டு இருந்தது. அந்த சமயம் , மேற்குவங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா தனது விலையுயர்ந்த கைப்பையை அருகில் வைத்து இருந்தார். […]
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற கோரி மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. இன்று நாடாளுமன்றத்தில்ஓர் முக்கியமான முன்மொழிவு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் மாற்ற முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தரப்பு, 2016ஆம் ஆண்டு முதலே மாநிலங்களுக்கு பெயர் மாற்றும் முறை மாற்றியமைக்க பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய உள்துறை […]
திரிணாமுல் காங்கிரஸ், பிஜேபி எம்எல்ஏக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரி உட்பட 5 பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பெரும் அமளி ஏற்பட்டது. பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. பிர்பூம் வன்முறை விவகாரம் தொடர்பாக குறித்து விவாதிக்கக் கோரியபோது, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைதி இழந்து கைகலப்பில் ஈடுபட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. […]
திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு மும்மதங்களையும் சுட்டி காண்பித்த்து மம்தா பானர்ஜி புது விளக்கம் அளித்துள்ளார். அடுத்த ஆண்டு கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிரமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி அவர்களும் கோவாவில் முகாமிட்டு கட்சித் தொண்டர்களிடம் பேசி வருகிறார். அப்போது பேசிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். […]
திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்எல்ஏ தன்மோய் கோஷ். பிஷ்ணுபூர் எம்எல்ஏ தன்மோய் கோஷ் அவர்கள், பாஜக-வில் இருந்து விலகி, அமைச்சர் பிராத்தியா பாசு முன்னிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தான் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி, மார்ச் மாதத்தில் பாஜகவில் இணைந்தார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது, பங்கூரா மாவட்டத்தின் பிஷ்ணுபூர் நகரத்தின் டிஎம்சி இளைஞர் தலைவராகவும், உள்ளூர் குடிமை அமைப்பின் கவுன்சிலராகவும் இருந்தார் என்பது […]