சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை முதல் அதிகாலை 1 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை முதல் அதிகாலை ஒரு மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இயங்கும். தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளின்படி மார்க்கெட் செயல்படுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து வர வேண்டும் என்றுவியாபாரிகள் சங்கம்தெரிவித்துள்ளது.
மேலும், ஜனவரி 9-ம் தேதி(நாளை மறுநாள்) முழு முடக்கத்தை முன்னிட்டுகோயம்பேடுமார்க்கெட்டிற்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.