சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் – குஷ்பு..!

BJP was not in a position to ask anyone for support and was ready to contest in the same constituency where MK Stalin was contesting

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் குஷ்பு யாரிடமும் ஆதரவு கேட்கும் நிலையில் பாஜக இல்லை என்று, மு.க ஸ்டாலின் போட்டியிடும் அதே தொகுதியில் தானும் போட்டியிட தயார் என்றும் தெரிவித்தார். ஆளுங்கட்சியாக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதி பெண்கள் குறித்து இழிவாக பேசியது கேவலமானது என குஷ்பு தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு தொடங்கியது. முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தான் முடிவெடுக்கும் என்று அக்கட்சியினர் கூறினார்.

இதற்கு அதிமுகவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்கள் தான் கூட்டணியில் இருக்க முடியும் என கூறினார். இதற்கிடையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக கூறிய நிலையில் அவரது பயணம் ரத்தானது.