நேற்றைய தினம் மகாராஷ்டிரா தலைநகரானமும்பையில் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டம் நடைபெற்ற பிறகு சிவசேனா கட்சியின் தலைவர்உத்தவ் தாக்கரேமுதலமைச்சராக இருக்க வேண்டும் எனவும் அவரே கூட்டணி கட்சியின் தலைவராகவே இருக்க வேண்டும் என கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியானது.சிவசேனா கட்சியின் தலைவர்உத்தவ் தாக்கரேமுதலமைச்சராக பதிவியேற்பார் என எதிர்ப்பார்த்த இருந்த நிலையில் திடீர் மாற்றமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின்அஜித் பவார்பாஜக-வுடன் கூட்டணியில் இணைந்ததை தொடர்து இன்று காலை மஹாராஷ்டிரா ஆளுநர் முன்பு மஹாராஷ்ட்ராவின் முதலமைச்சராக பாஜகவின்தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின்அஜித் பவார்பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதை தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்;மஹாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிர்ச்சியை அளிக்கிறது. மதச்சார்பின்மையை காப்பாற்றுவது இந்தியா அரசியல் அமைப்பியல் கடினமானது என்று மகாராஷ்டிரா காட்டியுள்ளது.ஜனநாயக நம்பகத்தன்மையை மகாராஷ்டிரா அரசியல் கேள்விக்குறியாக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.