ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் – புதுவை முதலமைச்சர் ரங்கசாமி

Puducherry Chief Minister Rangasamy has demanded that the central government immediately come forward to pay the GST compensation.

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல்.

டெல்லியில் இன்று காணொலி மூலம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு புதுச்சேரிக்கு வரக்கூடிய வருவாய் வெகுவாக குறைந்து விட்டது. ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், புதுச்சேரியில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த மத்திய அரசு நிதிஉதவி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.