மாநில MBBS இடங்களுக்கு கட்டுப்பாடுகள் என்ன.? மத்திய அரசு நிறுத்திவைத்ததன் பின்னணி…

MBBS seats

தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தமாக 71 மருத்துவ கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு மருத்துவ கல்லூரிகளில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் என மொத்தம் 6000 அரசு மருத்துவ இடங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் தேசிய மருத்துவ ஆணையமானது புதிய கட்டுப்பாடுகளை மருத்துவ கல்லூரிகளுக்கு விதித்தது. அதன்படி மாநிலத்தின் மக்கள் தொகையை கணக்கிட்டு பத்து லட்சத்திற்கு 100 மருத்துவ இடங்கள் மட்டுமே ஒதுக்க … Read more

குறைக்கப்பட்ட நிதி.! முடங்குகிறதா மத்திய அரசின் 100 நாள் ஊரக வேலை திட்டம்.?

100 days work scheme

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ” மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம்”.  இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள கிராமப்புற மக்களுக்கு உடலுழைப்பு சார்ந்த ஊரக பகுதி வேலைகள் தொடர்ந்து 100 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒருநாள் சம்பளத்தை மத்திய அமைச்சகமானது, தொழிலாளர் ஊதிய உயர்வு சட்டம் 6சியின் படி அவ்வப்போது சம்பள விகிதம் உயர்த்தப்படும். இந்த சம்பள விகிதமானது ஒவ்வொரு … Read more

மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசியை இலவசமாக வழங்கிய சீரம் நிறுவனம்..!

சீரம் நிறுவனம், மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசியை இலவசமாக வழங்கியுள்ளது. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், சீரம் நிறுவனம், மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசியை இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், கொரோனா அச்சம் எழுந்துள்ள நிலையில் … Read more

இ-ஸ்போர்ட்ஸ் – மத்திய அரசு அதிகாரப்பூர்வ அங்கீகாரம்!

இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுகளுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம். எஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுகள் இப்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் ஒரு விளையாட்டாக அங்கீகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இந்தியாவில் நடைபெறும் “மல்டி ஸ்போர்ட்ஸ் நிகழ்வு” பிரிவின் ஒரு பகுதியாக மின்னணு (E-sports) விளையாட்டுகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான முக்கிய … Read more

ராகுலுக்கு பாதுகாப்பு – மத்திய உள்துறை அமைச்சருக்கு காங்கிரஸ் கடிதம்!

ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம். இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார். ஒற்றுமை பயணத்தில் பங்கேற்கும் மக்கள் மற்றும் தலைவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் … Read more

சீனாவில் கொரோனா அதிகரிப்புக்கு இந்த 4 வகைகள் தான் காரணம் – இந்தியா

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு 4 வகைகள் தான் காரணம் என்று இந்தியாவின் கொரோனா குழு தலைவர் தகவல். சமீப நாட்களாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு நான்கு வகைகள் காரணமாகின்றன என்று மத்திய அரசின் கொரோனா குழுவின் தலைவரான என்கே அரோரா கூறியுள்ளார். அதாவது, ஓமிக்ரான் மாறுபாட்டின் BF.7 திரிபு 15% பாதிப்புகளுக்கு காரணம் என்றும்  பெரும்பாலான பாதிப்புகள் (50%) … Read more

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

அனைத்து தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம். மத்திய அரசு மற்றும் பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழ்நாட்டினருக்கான வாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டில் அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்குவது மட்டுமே சிறந்த சேவை. அனைத்து பகுதி மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குதல் மட்டுமே சிறந்த சேவையை உறுதி செய்ய முடியும். தமிழ்நாட்டில் … Read more

நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 5% அதிகரிப்பு.. உ.பி.யில் தான் அதிகபட்சம்!

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 5% அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்ட அரசு. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5% அதிகரித்துள்ளது என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 2022-இல் அதிகபட்சமாக நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் உத்தரபிரதேசத்திலும், இதன்பின் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் பீகாரிலும் பதிவாகியுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) படி, ஒன்பது இந்தியர்களில் ஒருவருக்கு வாழ்நாளில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ ஆக்சிஜனை தயாராக வைக்க அறிவுறுத்தல்!

மருத்துவமனையில் ஆக்சிஜனை தயாராக வைத்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல். மருத்துவமனைகளில் ஆக்சிஜனை போதிய இருப்பு வைத்திருக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களின் கையிருப்பு மற்றும் விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்யுமாறும், புதிய வகை கொரோனா திரிபு பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

#FakeNews: மத்திய சுகாதாரத்துறை பெயரில் பரவிய போலியான தகவல்கள்.!

மத்திய சுகாதாரத்துறை பெயரில் பரவிய சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் போலியானது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், சர்வதேச பயணிகளுக்கு கொரோனாவுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டதாக இன்று காலை தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை பெயரில் பரவிய சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வரும் பயணிகளின் கொரோனா சோதனை குறித்த செய்தி சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது. இது தவறான தகவல் … Read more