புதுச்சேரி மாநிலத்தில் ஆதி திராவிட மணமகள் நிதியுதவி திட்டம் உயர்த்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு. புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 2021-2022-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். முதல்வர் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இதில், குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தில் ஆதி திராவிட மணமகள் நிதியுதவி திட்டம் ரூ.75,000 இருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் […]
ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல். டெல்லியில் இன்று காணொலி மூலம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு புதுச்சேரிக்கு வரக்கூடிய வருவாய் வெகுவாக குறைந்து விட்டது. ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், புதுச்சேரியில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் […]
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி, 5 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. அதன்படி, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம் மற்றும் அறநிலைத்துறை முதல்வர் ரங்கசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. துறைமுகம், வக்ஃப் வாரியம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளை முதல்வர் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் நமச்சிவாயத்திற்கு உள்துறை, மின்சாரம், தொழில் மற்றும் வர்த்தகத்துறை, கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் உள்ளிட்ட துறைகளும் நமச்சிவாயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. லட்சுமி நாராயணனுக்கு பொதுப்பணித்துறை, சுற்றுலா, மீன்வளத்துறை, […]
புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வரவுள்ளதால் நாளை ஒருநாள் 144 தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள நாளை புதுச்சேரி வருகிறார். நாளை மாலை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேசிய முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக புதுச்சேரியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்கனவே போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை 144 […]
புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்க கூடாது? என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாக்காளர்களின் செல்போன் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைப்பதை தடுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. பாஜகவில் சேறுமாறும், வாக்களிக்குமாறும் குறுந்தகவல் வருவதாக புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கர் தலைவர் ஆனந்த் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதில் அதிருப்தி அடைந்த உயர் நீதிமன்றம், வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்தது எப்படி? என்று கேள்வி எழுப்பி, […]
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், நேரு ஆகியோர் நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 3 பேரையும் நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, […]
புதுச்சேரி மாநிலத்தில் 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கடந்த 11ம் தேதி உடன்பாடு கையெழுத்தானது. புதுச்சேரியை பொறுத்தளவில் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு 15, திமுக 13, சிபிஐ 1, விசிக 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுதாகிருந்தது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. […]
புதுச்சேரியில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதிகள் தற்போது அறிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்து, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பிடித்துள்ள இந்திய ஜனநாயக கட்சி முதல்கட்டமாக 20 சட்டப்பேரவை தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, சேப்பாக்கம், செங்கல்பட்டு, காட்பாடி, குடியாத்தம், அரூர், செங்கம், கலசப்பாக்கம், மயிலம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், வீரபாண்டி, குளித்தலை, பெரம்பலூர், […]
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம்காட்டி வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. புதுச்சேரியை பொறுத்தளவில் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு 15, திமுக 13, சிபிஐ 1, விசிக 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனிடையே, இன்று காலை என்.ஆர்.காங்கிரஸ், […]
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிரணி என இரு கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து தொகுதி பங்கீடு இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், 3வது அணியாக மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுசி கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட […]
புதுச்சேரில் முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தனது ஆதரவாளர்களுடன், ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரேஸிலிருந்து விலகி, ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ காரணமாக இருந்த 4 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் லட்சுமி நாராயணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, வரும் சட்டமன்ற தேர்தலில் […]
புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுப்பியுள்ளார் சிவக்கொழுந்து. சிவக்கொழுந்தின் சகோதரர் ராமலிங்கம் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, புதுச்சேரியில் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், […]
புதுச்சேரி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று புதுச்சேரியில் நடைபெற்று வரும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், வரும் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என கூறியுள்ளார். பொய் பேசுபவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்றால் அதை நாராயணசாமிக்கு தான் தரவேண்டும் என விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் ஊழலை வளர்க்கும் வேலையை மட்டுமே […]
ஜனநாயகத்தையே வெட்கப்படவைக்கும் இச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்? என கமல் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததால் கடந்த 22 ஆம் தேதி நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்திருந்தார். புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை […]
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிந்த நிலையில், எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து, புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை […]
புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிந்த நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்திருந்தார். எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் […]
புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிந்த நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்திருந்தார். எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி […]
புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை. புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைத்திருந்தார். முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய உள்துறைக்கு கடிதமும் அனுப்பப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது […]
புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், ஆட்சியை இழந்தது. பின்னர் முதல்வர் நாராயணசாமி பதிவு ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை ஆளுநர் தமிழிசையிடம் அளித்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார். நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு […]
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் நேற்று முதல்வர் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அளித்திருந்தார். ஆளுநர் இதை ஏற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். மேலும் புதுச்சேரி அமைச்சரவையின் ராஜினாமாவையும் குடியரசு தலைவர் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.