மே 1, 2 தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு – உயர்நீதிமன்றம் பரிந்துரை.!

The Chennai High Court has recommended the implementation of a complete curfew in Tamil Nadu on May 01 and 02.

மே 01, 02 தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேலும் சில கட்டுபாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இருப்பினும், மே 01, 02 தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தேர்தல் பணி தொடர்பான வாகனங்களை மட்டுமே அந்த இரண்டு நாட்களில் அனுமதிக்கலாம் என கூறியுள்ளது. மக்கள் பாதிக்காதவாறு முழு ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வரும் 28ம் தேதி வெளியிட வேண்டும் என்றும்  கூட்டம் கூடுவதை தவிர்க்கவே தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.