தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வேலைவாய்ப்பு – முக ஸ்டாலின் உறுதி

Stalin has promised that appropriate steps will be taken to provide employment to Tamils in Tamil Nadu.

தமிழர்களுக்கு தமிழகத்திலேயே வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முக ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட பின்னர் பேசிய அவர், தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தி, இளைஞர்களின் வாழ்க்கையை காப்பாற்றுவது தான் திமுகவின் முதல் பணியாக இருக்கும் என கூறியுள்ளார்.

இனிமேல் தமிழக இளைஞர்கள் வேலைக்காக வேறு எந்த மாநிலத்திற்கும் செல்ல தேவையில்லை. வேலை இல்லாத சூழல் இருக்காது. தமிழகர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வேலை கிடைக்கக்கூடிய சூழலை உருவாக்க, திமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களின் படிப்பிற்கு ஏற்ற வேலையை அவரவர் பகுதியிலேயே வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை திமுக நிச்சயமாக எடுக்கும் என முக ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.