#BREAKING: பதவி விலகிய திமுக எம்.எல்.ஏ சஸ்பெண்ட்..!

In Pondicherry, the outgoing DMK MLA Venkatesh was suspended from the DMK.

புதுச்சேரியில் பதவி விலகிய திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் 3 திமுக எம்எல்ஏக்கள் உள்ள நிலையில்,நேற்று தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்தது. இன்று காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நடந்த கூட்டத்தில்பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இந்நிலையில், கட்சியின் அடைப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டதால் நடவடிக்கை என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.