புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தகவல். புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறுவரை மற்றும் ஒதுக்கீடு செய்யும்போது தவறுகள் நடத்திருப்பதாகவும், முறையான வார்டுகள் ஒதுக்கப்படவில்லை என்றும் அம்மாநிலத்தில் முத்தியால்பேட்டை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ பிரெகேஷ் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணையின்போது, புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், வார்டு ஒதுக்கீடு தொடர்பாக புகார்கள் […]
மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிட கூட்டணி தலைமையான என்ஆர் காங்கிரேசிடம் வலியுறுத்துவோம் என அமைச்சர் நமச்சிவாயம் தகவல். புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் பின் செய்தியாளரிடம் பேசிய பாஜக அமைச்சர் அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிட எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார். சின்ஹா தீர்மானத்தின் அடிப்படையில், மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் என்றும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான […]
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் 15 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 26ம் தேதி தொடங்கி, அன்று மாலை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன்படி, 2021-22-ம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடாக ரூ.9,924.41 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுவையின் நிலுவைக் கடன் தொகை ரூ.9,334.78 கோடி. இந்திய அளவில் சராசரி உள்நாட்டு உற்பத்தி 7 […]
புதுச்சேரியில் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கட்சி தாவச் செய்து பாஜகவில் சேர்த்துக்கொண்டு இந்த ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கின்றார்கள் என வைகோ தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததால் துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 2014-ம் ஆண்டு முதல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் கவிழ்த்து வருகின்றன. அருணாச்சலப் பிரதேசம், […]
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தனது ராஜினாமா கடிதத்தை லட்சுமி நாராயணன் வழங்கினார். இந்நிலையில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டைமீறியதால் லட்சுமி நாராயணன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்தது. இதன் காரணமாக இன்று […]
புதுச்சேரியில் பதவி விலகிய திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். புதுச்சேரி சட்டப்பேரவையில் 3 திமுக எம்எல்ஏக்கள் உள்ள நிலையில்,நேற்று தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்தது. இன்று காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நடந்த கூட்டத்தில்பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இந்நிலையில், கட்சியின் அடைப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் […]
புதுச்சேரியில் இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், சட்டப்பேரவைக்கு எம்.எல்.ஏ-க்கள் வர தொடங்கியுள்ளனர். புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், முதல் அமைச்சர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். புதுச்சேரியில் இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், சட்டப்பேரவைக்கு எம்.எல்.ஏ-க்கள் […]