முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவாரூர் தொகுதி முன்னள் திமுக சட்டமன்ற உறுப்பினரும், அப்போதைய அதிமுக கழக பேச்சாளருமாக இருந்த அசோகன் தன்னை இரண்டு முறை

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவாரூர் தொகுதி முன்னள் திமுக சட்டமன்ற உறுப்பினரும், அப்போதைய அதிமுக கழக பேச்சாளருமாக இருந்த அசோகன் தன்னை இரண்டு முறை சுட்டு கொலை செய்ய பார்த்தார் என சென்னை பட்டினம்பாக்கம் போலீசில் அசோகனின் இரண்டாவது மனைவி ஹேமா புகார் அளித்திருந்தார்.அரசியல் பிரமுகர் அசோகன் தனது 2வது மனைவியுடன் சென்ன பட்டினம்பாக்கத்தில் 2015ஆம் ஆண்டு வசித்து வந்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவர் 2015 டிசம்பர் மாதம் தனது மனைவி ஹேமாவை இருமுறை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளார். உடனே அவர் பதறி பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.பிறகு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு, துப்பாக்கியால் சுட்டதை  உறுதி செய்து, அவரை தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்தனர்.அந்த வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்தது. இந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம், தனது மனைவி மற்றும் அவரது தாயாரை சுட்டு கொலை செய்ய முயற்சித்த குற்றத்தை உறுதி செய்து, திருவாரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் , 11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.