கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி.!

Tamil Nadu Chief Electoral Officer Satyaprada Sagu has said that the polling will be held from 7 am to 7 pm.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தேர்தலில் போட்டியிட 7255 பேர் மனு தாக்கல் செய்தனர் எனவும் தெரிவித்துள்ளார். இதில், 4512 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

தமிகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கொரோனா பாதித்த வேட்பாளர்கள் கவச உடையுடன் வாக்களிக்கலாம் என்றும் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி எனவும் கூறியுள்ளார். கொரோனா குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.