தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்கும் திட்டம் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மே 2ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் இல்லை என்றும் கூறியுள்ளார். வாக்கு எண்ணும் மையத்தில் செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தருவோம் என்றும் ஞாயிறு ஊரடங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலாளருடன் ஆலோசிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கொரோனா 2-வது ஆலை […]
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரேகட்டமாக நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு அறிவித்துள்ளார். அதாவது, 72 மணி நேரத்திற்கு முன் முகவர்கள், அதிகாரிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். மே 2-ஆம் […]
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி காலை 8 மணிக்குத்தான் தொடங்கும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். முகவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்று தேவையா என்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள், வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்று தேவையா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை […]
மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த குற்றச்சாட்டுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார். மே 2ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஓட்டு எண்ணும் மையங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாகவும், கண்டைனர் லாரிகள் அடிக்கடி வந்து செல்வதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, […]
தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மேசைகளை அமைப்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை மே 2ம் தேதி எண்ண இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வாக்கு எண்ணும்போது தொகுதிக்கு எத்தனை மேசைகளை அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் […]
தபால் வாக்குகள் மே 2 காலை 8 மணி வரை பெறப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்பேரில் தபால் வாக்களிக்க விரும்புபவர்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்து தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 அதாவது, […]
ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுமதி வழங்கியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி […]
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வகுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கிறது என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், ஒருபக்கம் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கம் தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாதியபிரதா சாகு, தமிழகத்தில் 88,947 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளில் 1,55,102 மின்னணு இயந்திரத்துடன் 1,20,807 […]
ஏப்ரல் 3 முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6 வரை பைக் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு. பைக் பேரணி என்ற பெயரில் வாக்காளர்களை அச்சுறுத்துவதாக புகார் எழுந்த நிலையில், ஏப்ரல் 3ம் தேதி முதல் பைக் பேரணிக்கு தடை விதிக்கப்படுகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, ஏப்ரல் 3 முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6 வரை பைக் பேரணிக்கு தடை […]
தேர்தல் பணியின்போது விபத்தில் இறந்த 2 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிதி வழங்குவதாக சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் அருகே தேர்தல் பணியின்போது விபத்தில் இறந்த 2 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். சமீபத்தில் பேருந்து மோதி பறக்கும்படை வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்த 2 போலீசார் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த […]
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக கரூரில் அதிகளவு புகார்கள் வந்துள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக கரூர் மாவட்டத்தில் அதிகளவு புகார்கள் வந்துள்ளன என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதாவது, C-Vigil என்ற தேர்தல் ஆணையத்தின் செயலிக்கு கரூர் மாவட்டத்தில் இருந்து 487 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 440 புகார்கள் உண்மைத்தன்மை உடையவை என்று கூறியுள்ளார். இதையடுத்து நட்சத்திர வேட்பாளர்கள் […]
தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தேர்தலுக்கு செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள், பணப்பட்டுவாடாவை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கொரோனா […]
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தேர்தலில் போட்டியிட 7255 பேர் மனு தாக்கல் செய்தனர் எனவும் தெரிவித்துள்ளார். இதில், 4512 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தமிகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் […]
பீகாரில் 12 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த சூழலில் தேர்தல் நடைபெற்றது என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம். தமிழகத்தில் கொரோனா பரவலால் சட்டப்பேரவை தேர்தலை ஒத்திவைப்பது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். பீகாரில் 12 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த சூழலில் தேர்தல் நடைபெற்றது என கூறியுள்ளார். பீகாரில் இருந்த போது தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர்களுக்கு […]
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், அனைத்து கட்சிகளும் தொகுதி மற்றும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து, பாதிப்பு நாள் ஒன்றுக்கு ஆயிரத்தை நெருங்குகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அனைவரும் மாஸ்க் மற்றும் பொது சுகாதாரத்துவதை மக்கள் கடைபிடிக்க […]
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை சந்தித்து தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்கவுள்ளோம் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். சட்டப்பேரவை தேர்தலில் […]