கொரோனா இழப்பீடு;காலக்கெடு நிர்ணயம் – மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.

கொரோனாதொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000இழப்பீடு வழங்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி இறந்தால் அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனாவால் இறந்தால் 60 நாட்களுக்குள் அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும்,மார்ச் 20 ஆம் தேதிக்கு முன்னதாக கொரோனாவால் இறந்தால் அவர்களது குடும்பத்தினர் இழப்பீடு கோரி  மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா இழப்பீடு;காலக்கெடு நிர்ணயம் – மத்திய அரசு அறிவிப்பு!